தரிசனம்
Share
யாழ்.போதனா வைத்தியசாலை 9
நோயாளர்களை எங்ஙனம் கௌரவத்துடன் நடத்த வேண்டுமோ அது போல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர் களின் உடல்களை கௌரவமாக உறவினர்களிடம் ஒப்படைப்பது மிகவும் கட்டாயமானதாகும்.
இருந்தும் பல்வேறு சந்தர்ப்பங்களில் மரண விசாரணைகள் இடம்பெறுகின்ற சூழ்நிலைகளில் உயிரிழந்தவரின் உடலை உறவினர்களிடம் ஒப்படைப்பதில் காலதாமதம் ஏற்படுகிறது.
மரணங்களுக்கான காரணங்களைக் கண்டறிவதற்குப் பிரேத பரிசோதனை அவசியம் என்பதை எவரும் நிராகரித்து விட முடியாது.
அதேநேரம் யாழ்.போதனா வைத்தியசாலையில் தொடர்ச்சியாகக் கிளினிக் செல் கின்ற – நோய் நிலை சார்ந்த மருத்துவ அறிக்கைகளை வைத்திருக்கக்கூடிய ஒரு நோயாளி, யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சில மணி நேரங்களில் உயிரிழக்கின்ற சந்தர்ப்பங்களில், மரண விசாரணை மற்றும் பிரேத பரிசோதனை செய்வதற்கு உத்தரவிடப்படுகிறது.
உண்மையில் குறித்த நோயாளியின் கடந்த கால நோய் நிர்ணய அறிக்கைகள் மற்றும் அவரின் குடும்ப உறவுகளின் வாக்குமூலங்களை அடிப்படையாகக் கொண்டு, மரணத்தில் சந்தேகம் இல்லை எனில் பரிசோதனைகளைத் தவிர்த்து, உறவினர்களிடம் உடலை விரைவாக ஒப்படைப்பது உத்தமமானது.
எனினும் வில்லங்கம் எதற்கு என்பது போல எடுத்ததற்கெல்லாம் பிரேத பரிசோதனைகளை நடத்துவதென்பது காலதாமதத்தை ஏற்படுத்துவதுடன் சம்பந் தப்பட்ட உறவுகளுக்கும் மிகுந்த மன உளைச்சலையும் ஏற்படுத்தவல்லது.
அது தவிர, உறவினர்கள் பலர் அதற்காக யாழ். போதனா வைத்தியசாலையில் காத்திருக்கின்ற பரிதாபமான நிலைகளும் ஏற்படுகின்றன.
எனவே இதுவிடயத்தில் யாழ்.போதனா வைத்தியசாலை நிர்வாகம் அதீத கவனம் செலுத்த வேண்டும் என்பது நம் தாழ்மையான கோரிக்கை.
ஆம், பொதுவில் முஸ்லிம் இனம் சார்ந்த ஒருவர் யாழ். போதனா வைத்தியசாலையில் உயிரிழக்க நேர்ந்தால், அவரின் ஜனாஸா உடனடியாக அவரின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுகின்றது.
24 மணி நேரத்திற்குள் அவரின் உடல் அடக்கம் செய்யப்பட வேண்டும் என்ற இஸ் லாமிய மார்க்கத்தின் பொருட்டு, உயிரிழந்த இஸ்லாமியரின் உடலை உடனடியாக ஒப்படைக்க முடியுமென்றால், அந்த உரிமை-அந்த விரைவு படுத்தல் நாம் தமிழர் என்பதால் மறுக்கப்படுகிறதா? என்ற கேள்வி எழவே செய்யும்.
என்ன செய்வது உயிரிழந்த ஓர் இஸ்லாமியரின் உடலை உடனடியாக ஒப்படைக்காமல் பின்னடிக்கப்படுமாயின், அதன் விளைவு பாரதூரமாக இருக்கும் என்பது சம்பந்தப்பட்ட வைத்தியசாலைகளுக்கு நன்கு தெரியும்.
எனவே இஸ்லாமியர்களின் மார்க்கத்துடன் முரண்படாமல், விளக்கம் விசாரணைகள் தவிர்க்கப்பட்டு இஸ்லாமியரின் உடல் கௌரவமாகவும் விரைவாகவும் ஒப்படைக்கப்படுகிறது.
அதேநேரம் ஒரு தமிழர் என்றால், அவரின் உறவுகள் வைத்தியசாலை பிரேத அறை க்கு முன்பாக அழுகண்ணீரோடு காத்திருக்கின்ற பரிதாபம் இனத்தின் பேரால் ஜீரணிக்கப்படுகிறது.
அதிலும் ஒருவர் நோய் வாய்ப்பட்டு வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லும் வழி யில் உயிரிழந்து, அது பற்றி அறியாமல் வைத்தியசாலை வாசலைத் தொட்டு விட்டால் அந்தோ கதிதான்.
சகல சம்பத்துக்களும் நடந்த பின்பே அவரின் உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படும்.
அவர் மிகக் கடுமையான நோயாளியாக – அந்த நோய் நிலையுடன் அவர் உயிர் வாழ க்கூடிய சாத்தியம் மிகமிகக் குறைவு எனத் தெரிந்திருந்தாலும் உயிரற்ற உடலாக வைத்தியசாலையைத் தொட்டு விட்டால், அத்தனை அலுவல்களும் நடந்தாகும்.
இதேவேளை இடைவழியில் உயிரிழந்து விட்டார் என்பதை அறிந்து வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லாமல், வீட்டி ற்கு எடுத்துச் சென்றால் அந்தப் புண்ணியவானின் மரணச் சடங்கு எந்த இழுபறியும் இல்லாமல் இனிதே நடந்தேறும்.
இயற்கையாக மரணித்தும் வெட்டிப் புரைகின்ற…
ஒருவர் இயற்கை மரணமடைந்துள்ளார் என்ற உண்மையை மருத்துவர்கள் தெரிந்திருந்தும் நமக்கேன் வீண் சோலி என்ற நிலைப் பாட்டில் பிரேத பரிசோத னைக்கு உத்தரவிடப்படு கின்ற சந்தர்ப்பங்கள் யாழ். போதனாவைத்தியசாலையில் நிறையவே நடந்துள்ளது.
எனினும் ஒருவிடயத்தை இங்கு நாம் கூறியாக வேண்டும். அதாவது மரணம் என்பது ஒரு மனிதனின் இறுதி அத்தியாயம்.
அதிலும் தமிழர்களாகிய நாங்கள் மரணம் எவ்வாறாக நடந்தது என்பதை வைத்து அவரின் புண்ணியத்தை எடைபோடுகின்ற பண்பாட்டை உடையவர்கள்.
இந் நிலையில், இயற்கையான மரணத்தைத் தழுவிய போதிலும் காலப்பிழை போல உடலை வெட்டிப் புரைந்து அவரின் கோலத்தை மாற்றுகின்ற சம்பவங்கள் மனித வாழ்வின் நிறைவைக் கூட பழுதாக்கி விடுகிறது.
எனவே முடிந்தளவில் மருத்துவ ரீதியான முடிவுகளோடு, உயிரிழந்தவர்களின் உடல்களை உறவினர்களிடம் விரைவாக ஒப்படைக்க யாழ்.போதனா வைத்திய சாலைச் சமூகம் முன்வர வேண்டும்.
தொடரும்…


