கம்பஹா பொது வைத்திய சாலையின் பணிப்பாளர் உள்ளிட்ட 8 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்ட ஒருவர் அண்மையில், கம்பஹா வைத்தியசாலைக்கு சென்று பணிப்பாளரை சந்தித்து பேசியிருந்தார். இதையடுத்தே பணிப்பாளர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
நாடு முழுவதும் இன்று வியாழக்கிழமை இரவு 8 மணி தொடக்கம் எதிர்வரும் மே 4ஆம் திகதி அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு நடைமுறைப் படுத்தப்படும் என்று ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது. இதன்படி வெள்ளி, சனி, ஞாயிறு தினங்கள் நாடு முழுவதும் முடக்கப்பட்டிருக்கும்.
கொரோனா வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்தும் நடவடிக்கையுடன் தொடர்புடைய கைது சம்பவங்கள் நாட்டின் சட்டங்களுக்கு அமைவானதாக இருக்க வேண்டும் என, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் தீபிகா உடுகம, பதில் பொலிஸ்மா அதிபருக்கு அனுப்பியுள்ளகடிதத்தில் தெரிவித்துள்ளார். சமூக ஊடகங்களில் போலியான தகவல்களை பிரசாரம் செய்த குற்றச்சாட்டில் அண்மை யில் ...
“தெளிவு” என்ற தமிழ்ச் சொல்லின் மகி மையை பலரும் உணராதிருப்பது வேதனைக் குரியது. தெளிவு என்பது ஒருவரின் நிதானத்தை, அறிவாற்றலை, விடயப் பொருள் மீது அவரி டம் இருக்கின்ற புலமையைச் சுட்டி நிற்பதாகும். இங்கு பேசுவதில், எழுதுவதில், கருத்துரைப்பதில், அச்சுப்பதிப்புச் செய்வதில் என தெளிவு என்ற உயர் சொல், ...
நாட்டில் கொரோனாத் தொற்றைக் கட்டுப் படுத்துவதில் களமிறக்கப்பட்ட படைத்தரப்பின ருக்கு கொரோனாத் தொற்றுப் பரவத் தொடங்கியுள்ளமை மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதில் படையினர் களமிறக்கப்பட்டபோது பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. இருப்பினும் படையினரை ஈடுபடுத்தியமை ஏற்றுக் கொள்ளக் கூடியது என்ற கருத்து நிலை கொரோனா கட்டுப்பாட்டுக்குள் வந்த ...
போதியளவு சுகாதார ஏற்பாடுகள் இல்லாததால் யாழ்.கோப்பாய் தேசிய கல்வியியற் கல்லூரியில் இராணுவத்தால் அமைக்கப்பட விருந்த கொரோனா தனிமைப்படுத்தல் நிலையத்துக்கான ஏற்பாடுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. கொரோனா தனிமைப்படுத்தல் நிலையத்தை அமைப்பதற்காக நேற்று முன்தினம் தேசிய கல்வியியற் கல்லூரியில் இரு விடுதிகள் இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டன. இந்த நிலையில் விடுமுறையில் சென்றிருந்த இராணுவத்தினர், நேற்றுக் ...
ராஜிவ் கொலை வழக்கில் 28 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ள முருகன் என்கிற ஸ்ரீகரனின் தந்தை வைரவப்பிள்ளை வெற்றிவேலு புற்றுநோயால் பாதிக்கப்பட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார். ராஜிவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முருகன் இந்தியாவின் வேலூர் ...
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற க.பொ.த சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள் நேற்று மாலை வெளியாகியது. கிடைக்கப்பெற்ற பெறுபேறுகளின்படி யாழ்ப்பாணத்தில் வேம்படி மகளிர் கல்லூரியில் 58 மாணவிகளுக்கு 9ஏ சித்தியும் 36 மாணிகளுக்கு 8ஏ சித்தியும் 36 மாணவிகளுக்கு 7ஏ சித்தியும் கிடைக்கப் பெற்றுள்ளது.
எம்பிலிபிட்டிய நீதவான் நீதிமன்றின் பெண் நீதவான் அவரது உத்தியோகபூர்வ இல் லத்திலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். நீதவானின் கணவர், வெலிசர கடற்படை முகாமில் சேவை யாற்றும் நிலையில் கடந்தவாரம் அவர் எம்பிலிபிட்டிய நீதவானின் உத்தியோகபூர்வ இல்லத்தில் தங்கிருந்தமை தெரியவந்துள்ள நிலையிலேயே, இந்நடவடிக்கை எடுக்கப்பட்டதாக சப்ரகமுவ மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ...
எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும்அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு என்றார் வள்ளுவர் வள்ளுவர் கூறிய குறளின் தத்துவம் மிகவும் உன்னிப்பாகக் கவனிக்கப்பட வேண்டி யதாகும். இங்கு யார் யார் வாய்க் கேட்பினும் என்பது எவை எழுகை பெற்றாலும் அதற்கான உண்மைப் பொருளைக் கண்டறிவதே அறிவு ஆகும் எனப் ...