சுகாதார அமைச்சின் செயலாளராக முன்னாள் இராணுவ அதிகாரியான மருத்துவர் நியமிக்கப்பட்டுள்ளார் என்று அரச தகவல்கள் தெரிவிக்கின்றன. நாட்டில் கொரோனா தொற்று பரம்பலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் முற்று முழுதாக முப்படையினரை ஈடுபடுத்தி வந்த நிலையில் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் மருத்துவ நிபுணர் சஞ்ஜீவ முனசிங்க சுகாதார அமைச்சின் செயலாளராக ...
கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 9 பேர் நேற்று ஞாயிற்றுக்கிழமை அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது. இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 856 ஆக (ஜனவரியில் பாதிக்கப்பட்ட சீனப் பெண் உட்பட) அதிகரித்துள்ளது.
அனைத்து மாவட்டங்களிலும் இன்று திங்கட்கிழமை முதல் அரச மற்றும் தனியார் நிறுவனங்களை கட்டுப்பாட்டுடன் திறப்பதாக அரசு அறிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பாக நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்துள்ள இராணுவத் தளபதி சவேந்திர சில்வா இந்த காலப்பகுதியில் பொதுமக்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். ஊரடங்குச் ...
கோவிட் – 19 என்ற கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ள பொதுத் தேர்தலை நடத்துவதா இல்லையா என்பது குறித்து நாளை 12ஆம் திகதி தீர்மானம் எடுக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக் குழுவின் தகவல்கள் தெரிவிக்கின்றன. தேர்தல்கள் ஆணைக்குழு நாளைய தினம் அதன் தலைவர் மகிந்த தேசப்பிரிய ...
நாளை திங்கட்கிழமை ஊரடங்கு தளர்த்தப்பட்ட பின் மாகாணத்துக்குள்ளான போக்கு வரத்துக்கு பாஸ் அனுமதி தேவையில்லை என யாழ்.மாவட்ட அரச அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார். மாவட்ட செயலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், ஊரடங்கு தளர்த்தப்பட்ட பின் சுகாதார நடைமுறையுடன் ...
வடமராட்சி கிழக்கு நாகர் கோவில் பகுதியில் உள்ள வீடொன்றை இராணுவத்தினர் சுற்றி வளைத்து தேடுதல் நடத்தியதுடன் வீட்டில் இருந்த வயோதிபப் பெண் மீதும் தாக்குதல் நடத்தியதோடு வீட்டு உடைமைகளையும் சேதப்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் நேற்று முன்தினம் பின்னிரவு இடம்பெற்றுள்ளது. இராணுவத்தினரின் தாக்குதலுக்கு இலக்கான வயோதிபத் தாய் காயமடைந்த நிலையில் ...
கொரோனா வைரஸ் பரவியுள்ள பின்னணியில் பொதுத் தேர்தலைவிட பொதுமக்களின் பாதுகாப்பே முக்கியமானது என ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறியுள்ளார். ஐக்கிய தேசியக் ...
நாட்டில் முஸ்லிம் சகோதரர்களுக்கு எதிராகப் பரவலாக அரங்கேற்றப்படுகின்ற இனவாத செயற்பாடுகள் மிகவும் அருவருக்கத்தக்கவை என்பதுடன், கௌதம புத்தரின் உன்னத போதனைகளுக்கும் முரணானவை என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ சாடியிருக்கிறார். இதுகுறித்து அவர் தனது உத்தி யோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் செய்திருக்கும் பதிவில் மேலும் கூறியிருப்பதாவது, ...
எதிர்வரும் திங்கட்கிழமை முதல் நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களின் அலுவலங்களின் பணிகளை மீண்டும் ஆரம்பிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதனடிப்படையில், பல்கலைக்கழகங்களின் விரிவுரையாளர்கள் மற்றும் கல்வி சாரா ஊழியர்களில் தெரிவு செய்யப்பட்டவர்களை மாத்திரம் அழைக்க நடவடிக்கை எடுக் கப்பட்டுள்ளது என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. எதிர்வரும் திங்கட்கிழமை முதல் ...
ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டதன் பின்னர் மதுபான விற் பனை நிலையங்கள் திறக்கப்படாதென தெரிவிக்கப்பட்டுள்ளது. தீவிரமாக பரவி வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த மதுபானசாலைகள் அனைத்தும் மூடப்பட்ட நிலையில் உள்ளன. நாட்டில் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கின்ற மற்றும் தளர்த்தப்படும் சந்தர்ப் பங்களில் எக்காரணம் கொண்டும் மதுபான சாலைகளை திறக்க ...