முட்டையில் உள்வெடிப்பு ஏற்பட்டால் அது உயிர்ப்பைத் தரும். வீட்டுக்குள் உள்வெடிப்பு ஏற்பட்டால் அது அஸ்தமனத்தைத் தரும். ஆம், முட்டையின் உயிர்ப்பு என்பது உள் வெடிப்பில் இருந்து வெளிப்படுவது. முட்டைக் குள் இருக்கும் உயிர்தன் முகிழ்ப்புக்காக உள் உடைவை ஏற்படுத்தி ஜனனப்படுகிறது. மாறாக முட்டை வெளியில் இருந்து உடைபடுமாயின் அது ...
நாட்டில் 2009 ஆம் ஆண்டு இடம்பெற்ற இறுதி யுத்தத்தில் இறந்த மக்களுக்கான நினைவுத் தூபி அடங்கிய நினைவாலயம் ஒன்றினை அமைப்பதற்கு கரைச்சி பிரதேச சபையில் நேற்று இடம்பெற்ற அமர்வில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. குறித்த தீர்மானத்தில் நினைவாலயம் கிளிநொச்சி நகரப்பகுதியில் பிரதேச சபையின் ஆளுகைக்குள் உள்ள பசுமைப் பூங்காவில் அமைப்பதற்காகவும் ...
ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படும் அனைத்து மாவட்டங்களிலும் தனியார் மற்றும் இ.போ.ச பேருந்து மற்றும் தொடருந்து சேவைகள் இன்று முதல் அனைத்து வழிகளிலும் செல்ல அனுமதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார நடை முறைகளைப் பின்பற்றி ஆசனங்களை ஒதுக்கீடு செய்து இந்த சேவையை வழங்கப்படவேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் ...
தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க நடவடிக்கை எடுப்பேன் என பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். எம்.ஏ.சுமந்திரனுடனான சந்திப்பின்போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அனுப்பி வைத்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடக பேச்சாளரும் யாழ் மாவட்ட முன்னாள் பாராளுமன்ற ...
கொரோனா வைரஸ் ஆபத்து காரணமாக கடும் கட்டுப்பாடுகளை விதித்திருந்த நாடுகள் அந்த கட்டுப்பாடுகளை தளர்த்திய பின்னர் வைரஸ் தொற்றியவர்கள் அடையாளம் காணப்படுவது அதிகரித்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இவ்வாறான ஆபத்து அதிகரித்துள்ள நாடுகளாக சீனா, தென் கொரியா மற்றும் ஜேர்மனி ஆகிய நாடுகள் கடந்த வாரம் அடையாளப்படுத்தப்பட்டன. ...
மோட்டார் சைக்கிளில் வந்த வாள்வெட்டுக்குழுவினரால், மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டில் இருவர் படுகாயமடைந்ததுடன், மோட்டார் சைக்கிள் மற்றும் ஆட்டோ அடித்து நொருக்கப்பட்ட சம்பவம் ஒன்று நேற்று நல்லூர் முத்திரைச் சந்திப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. ஊரடங்கு தளர்த்தப்பட்டு சில மணி நேரங்களில் இந்த சம்பவம் வாள்வெட்டுக் குழு வினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளமை மக்கள் மத்தியில் ...
இரண்டாம் தவணைக் கல்வி நடவடிக்கைகளுக்காக பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு இன்னும் ஒரு மாத காலமாகலாம் என கல்வி அமைச்சர் டலஸ் அழகப் பெரும தெரிவித்துள்ளார். மாத்தறை மாவட்ட செயலகத்தில் நேற்று திங்கட்கிழமை இந்த விடயம் குறித்து கருத்து தெரிவித்த அவர், சுகாதார அதிகாரிகளின் பரிந்துரையின் அடிப்படையிலேயே பாடசாலைகள் மீண்டும் ...
முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கைவேலிப் பகுதியில் நேற்றைய தினம் காணி ஒன்றில் இருந்து விடுதலைப் புலிகளின் சீருடைகள் மீட்கப்பட்டுள்ளன. அந்த நிலத்தில் இருந்து பெட்டி ஒன்று கண்டெடுக்கப்பட்டதாகவும், அது குறித்து காணி உரிமையளார் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார். இதனையடுத்து, குறித்த இடத்திற்கு சென்ற பொலிஸார் அந்த ...
இலங்கைக்கான விமான சேவைகளை எதிர்வரும் ஜூன் மாதம் முதல் மீண்டும் ஆரம் பிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார். எனினும் நாட்டுக்குள் வரும் சகல பயணிகளையும் பரிசோதனை செய்யும் விசேட வேலைத் திட்டம் குறித்து அரசாங்கம் ஆராய்ந்து வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். விமான சேவைகளை ...