வேட்பாளர் ஒருவரின் சுவரொட்டியை சுவரில் ஒட்டிய நால்வர் நேற்று இரவு வட்டுக் கோட்டைப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். யாழ், கிளிநொச்சி வேட்பாளர் ஒருவருடைய சுவரொட்டியை ஒட்டிய நால்வரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து வாகனம் ஒன்றும் ஒரு தொகை சுவரொட்டிகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கிளிநொச்சி ஜெயபுரம் பொலிஸ் பிரிவில் இடம் பெற்ற விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானதுடன் மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர். குறித்த விபத்து சம்பவம் நேற்று முன்தினம் வியாழக்கிழமை இரவு கிளிநொச்சி ஜெயபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மன்னார் யாழ் வீதியில் இடம்பெற்றுள்ளது. வீதியில் தரித்து நின்ற பார ஊர்தியுடன் யாழ் ...
நல்லூர்க் கந்தப் பெருமானுக்கு இன்று கொடியேற்றம். நல்லூர் முருகனின் திருவிழா என்பது தமிழ் மக்களின் பெருவிழா. சமய பேதமின்றி அனைத்து மக்களும் பங்கேற்கின்ற நல்லூர்க் கந்தனின் திருவிழாவுக்குச் சென்று வந்தாலே அது பெரும் பேறு என்று கருதுபவர்கள் நாம். இதற்கு மேலாக, அலங்காரக் கந்தனைக் கண்டால் போதும். அதுவே ...
தொழிற்சங்கம் என்ற கட்டமைப்பு இன்று தனது இயல்பை இழந்து நிற்கிறது. ஒரு காலத்தில் இருந்த தொழிற்சங்கங்கள் நடுவுநிலை நின்று தமது தொழிலாளர்களின் – பணியாளர்களின் – சேவையாளர்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுத்து வந்தன. அதேநேரம் அரசியல் கட்சிகளும் தத்தம் கட்சி சார்ந்த தொழிற்சங்கங்களை அமைத் திருந்தன. இவ்வாறு அரசியல் ...
கிளிநொச்சியில் நேற்று இடம் பெற்ற வீதி விபத்தில் முதியவர் ஒருவர் உயிரி ழந்துள்ளார். ஏ 9 வீதியில் நேற்று முற்பகல் 11.30 மணியளவில் இந்த விபத்து இடம் பெற்றுள்ளது. மிதிவண்டியில் பயணித்த முதியவர் வீதியைக் கடக்க முற்பட்டபோது, வவுனியாவிலி ருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்துச்சபை பேருந்து ...
நீதியரசர் விக்னேஸ்வரன் தமிழ் மக்களுக்கு கிடைத்த பொக்கிம். நாம் அவரை நமக்குக் கிடைத்துள்ள தலாய்லாமாவாக (திபெத்தின் ஆன்மீகத் தலைவர்) பார்க்க வேண்டும் என அரசியல் ஆய்வாளர் மு.திருநாவுக்கரசு தெரிவித்துள்ளார். சென்னையிலிருந்து இணையவழி மூலமான பேட்டி ஒன்றிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ் மக்கள் எப்படி ...
நாட்டில் வாழும் மூவின மக்களுக்கும் சமவுரிமை உள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆட்சி அமைத்தால் அனைத்து மக்களுக்கும் சமவுரிமை வழங்கப்படும் என பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேர்தல் பிரசாரக் கூட்டம் நேற்று வியாழக்கிழமை கந்தளாய் குணவர்த்தன மண்டபத்தில் நடைபெற்றிருந்தது. இதில் ...
வடக்கு மாகாணத்தின் ஆளுநராக முன்னாள் இராணுவ அதிகாரியை நியமிக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. பொதுத் தேர்தல் இடம்பெற்று புதிய அமைச்சரவை நியமனத்தின் பின் இந்த நியமனத்தை வழங்க அவர் தீர்மானித்துள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது. ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரியான மேஜர் ஜெனரல் பொனிபஸ் பெரேராவை ...
ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் போராளியும் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் இசைத் துறை விரிவுரையாளருமான கண்ணதாசன் நேற்று விடுதலை செய்யப்பட்டுள் ளார். வவுனியா மேல் நீதிமன்றம் வழங்கிய ஆயுள் தண்டனையை இரத்துச் செய்து அவரை விடுதலை செய்யுமாறு மேன் முறையீட்டு நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டது. கண்ணதாசனால் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டின் ...
வவுனியா ஓமந்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கோவில்குஞ்சுக்குளம் பகுதியில் உள்ள கிணற்றிலிருந்து 14 மோட்டார் ஷெல்களை மீட்டுள்ளதாக ஓமந்தை பொலிஸார் தெரி வித்தனர். குறித்த பகுதியில் அமைந்துள்ள தனியார் காணியிலுள்ள கிணறு ஒன்றை வீட்டின் உரிமையாளர் துப்புரவு செய்துள்ளார். இதன்போது கிணற்றில் சந்தேகத்திற்கிடமான பொருட்கள் இருப்பதை அவதானித்த நிலையில், ஓமந்தை ...