குடும்பத் தகராறு காரணமாக பிரிந்து வாழும் மனைவியை அவர் வேலை செய்யும் வீட்டுக்குச் தேடிச் சென்ற கணவர் சித்திவதையின்பின் கத்தியால் குத்தி படுகாயப்படுத்தியுள்ளார். படுகாயமடைந்த 2 பிள்ளைகளின் தாயார் யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். குப்பிளான் பகுதியில் நேற்று நண்பகல் இடம்பெற்ற இந்தச் சம்பவம் தொடர்பாக ...
பாராளுமன்ற தேர்தலில் வடக்கில் இம் முறை விசேட கவனம் செலுத்தப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். மேலும் சுதந்திரமானதும் அமைதியானதுமான தேர்தலுக்கு சவாலாக அமையும் எந்தவொரு செயற்பாட்டிலும் ஈடுபடக் கூடாது என அனைத்து கட்சி வேட்பாளர் களுக்கும் தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. வெள்ளிக்கிழமை தொடக்கம் ...
ராஜபக்ஷகளின் கைகளுக்கு ஆட்சி அதிகாரம் சென்றால் மீண்டும் ஜனநாயகத்தை மீட்டெடுப்பது கடினமென முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமைகள் தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக ராஜித சேனாரத்ன மேலும் கூறியுள்ளதாவது, “நல்லாட்சியை ஆரம்பிக்க தலைமை தாங்கிய ...
கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தில் இருந்த யாழ்ப்பாணம் நெடுங்குளம் கிராமத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. குறித்த இளைஞனை அண்மைக் காலமாக உறவினர்கள், நண்பர்கள் எவரும் சென்று பார்க்க வில்லை. அதனால் பொது மக்கள் அச்சமடையத் தேவையில்லை என சுகாதாரப் பிரிவு அறிவித்துள்ளது.
ஒரு நாள் இராமகிருஷ்ண பரமஹம்சர் ஆற்றில் நீராடிக் கொண்டிருந்தார். அந்நேரம் மட்டத்தேள் ஒன்று ஆற்றில் தத்தளித்துக் கொண்டிருந்தது. இதனைக் கண்ணுற்ற பரமஹம்சர் தனது கைகளை நீட்டி அந்த மட்டத்தேளைத் தூக்கி னார். அவ்வளவுதான் தேள் அவரின் கையில் கொட்டியது. தேள் கொட்டியதும் தன் கையை உதறினார் பரமஹம்சர். மீண்டும் ...
தமிழர்களுக்கான அரசியல் தீர்வு கிடைக்கும், அரசியல் அமைப்பு மூலமாக நிரந்தர தீர்வு வழங்கப்படும் என்ற கதைகளைக் கூறிக்கூறி தமிழர்களை எழுபது ஆண்டுகளாக ஏமாற்றி விட்டனர். இந்த நாட்டில் சிறுபான்மை இனத்தவர் அழிவுகளை சந்திக்க ஒரு சூழல் உரு வாக்கியதற்கு ஆட்சியாளர்கள் அனைவரும் வெட்கப்பட வேண்டும் என மக்கள் விடுதலை ...
வடக்கு, கிழக்கில் சிவில் நிர்வாகம் செய்ய வேண்டிய அனைத்து வேலைகளையும் இராணுவமே செய்கின்றது. இந்தநிலையில், அங்கு நீதியான தேர்தல் நடைபெறுவது சந்தேகமே என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். சிங்கள ஊடகம் ஒன்றுக்கு அளித்த செவ்வியில் அவர் மேலும் தெரிவித்ததாவது, “நாடெங்கும் சிவில் நிர்வாக ...
யாழ்.அராலிப் பகுதியில் வீடொன்றின் கூரைபை பிரித்து உள்நுழைந்து திருடிய சம்பவத்துடன் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படும் ஒருவரை கோப்பாய் பொலிஸாரின் மோப்ப நாய் ரொக்கியின் உதவியுடன் பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அராலிப் பகுதியில் நேற்று முன்தினம் வீட்டின் கூரையை ...
கிளிநொச்சி செல்வாநகர் பகுதியில் மூன்று இலட்சத்து 18 ஆயிரம் ரூபாய் பணம் மற் றும் ஒரு கிலோ கேரள கஞ்சாவுடன் நேற்று முற் பகல் 11 மணியளவில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கிளிநொச்சி முல்லைத்தீவு பிராந்திய பிரதி பொலிஸ்மா அதிபரின் விசேட பொலிஸ் பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு ...
இலங்கை முழுவதும் கொரோனாப் பரிசோதனை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அனைத்து மாவட்டங்களிலும் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு கொரோனாப் பரி சோதனை மேற்கொள்வதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. இந்த மாவட்டங்களின் மக்கள் தொகைக்கு ஏற்ப இந்த சோதனைகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் சமூகத்திற்குள் பரவியுள்ளதா என்பதை அறிய இந்த சோதனைகள் ...