Type to search

Local News

கொரோனா பாதிப்பு 59 ஆக அதிகரிப்பு

Share

கிளிநொச்சி யு9 வீதி தொண்டமா நகர் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
குறித்த விபத்து நேற்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது

.
மோட்டார் சைக்கிளும் துவிச் சக்கரவண்டியும் மோதியதிலேயே குறித்த விபத்து இடம் பெற்றுள்ளது.
கிளிநொச்சி பொதுச்சந்தையில் மரக்கறி வியாபாரத்தில் ஈடுபட்டுவிட்டு துவிச்சக்கர வண்டியில் வீடு திரும்பிக்கொண்டிருந்த போது துவிச்சக்கரவண்டியை திருப்ப முற் பட்டசமயம் பின்னால் வந்த மோட்டார் சைக்கிளில் மோதியுள்ளது.
இதன்போது துவிச்சக்கர வண்டியில் பயணித்தவர் சம்பவ இடத்திலேயே உயிரி ழந்துள்ளார்.
உயிரிழந்தவர் 66 வயதுடைய கனகாம்பிகைக்குளம் பகுதியைச் சேர்ந்த வேலாயுதம் சென்மாணிக்கம் ஆவார்.
மோட்டார் சைக்கிளில் பயணித்த கிளிநொச்சி பாரதிபுரத்தைச் சேர்ந்த 26 வயதுடைய துளசிநாதன் மனோகரன் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்து தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link