Type to search

Headlines

கொரோனா வைரஸினால் அமெரிக்காவில் உயிரிழப்பு 20 ஆயிரத்தையும் தாண்டியது

Share

கொரோனா வைரஸ் தொற்றினால் அதிகமாக உயிரிழந்தவர்களின் நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்திற்கு வந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதுவரையிலும் இத்தாலி முதலிடத்தில் இருந்து வந்த நிலையில், தற்போது அமெரிக்கா அந்த பட்டியலில் முதலிடம் பெற்றுள்ளது.

இதன்படி, கொரோனா வைரஸ் தொற்றினால் அமெரிக்காவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20,304 பேர் ஆக பதிவாகியுள்ளது. அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக இத்தாலியில் 19,468 பேர் உயிரிழந்துள்ளனர்.

உலக அளவில் கொரோனா தொற்றினால் 1,766,855 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 108,124 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா தொற்றினால் அமெரிக்கா வில் 525,559 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link