Type to search

Headlines

20ஆம் திகதிக்கு பின்னர் ஊரடங்கு தளர்த்தப்படும்

Share

தற்போது மேற்கொள்ளப்படும் சுகாதார பாதுகாப்பு வேலைத் திட்டங்கள் இதேவிதத்திலேயே முன்னெடுக்கப்பட்டால், எதிர்வரும் 20ஆம் திகதிக்குப்பின் ஊரடங்குச் சட்டத்தை பகுதி பகுதியாக நீக்குவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தும் என்று அத்தியாவசிய சேவைகள் தொடர்பான ஜனாதிபதி செயலணிக்குழுவின் தலைவர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

எனினும் கொரோனா வைரஸ் காரணமாக அதிக பாதிப்பான நிலைமையை எதிர் நோக்குவதாக அறிவிக்கப்பட்டுள்ள மேல் மாகாணத்தில் தங்கியிருக்கும் வெளி மாவட் டங்களை சேர்ந்தவர்களுக்கு புத்தாண்டுக்கு ஊர்களுக்கு செல்ல சந்தர்ப்பம் வழங்கினால், எதிர்வரும் 20ஆம் திகதிக்கு பின்னர் ஊரடங்குச் சட்டத்தை தளர்த்த சந்தர்ப்பம் கிடைக்காது.

மேல் மாகாணத்தில் தங்கியிருக்கும் வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் புத் தாண்டுக்கு தமது ஊர்களுக்கு செல்ல அரசாங்கத்திடம் போக்குவரத்து வசதிகளை கோரியுள்ளனர்.

எனினும் நிலவும் நிலைமைக்கு அமைய இவர்கள் கொழும்பில் இருந்து வெளியேறினால், கொரோனா வைரஸ் சில விதத்தில் பரவக்கூடும் .அப்படி நடந்தால், கிராமங்கள் முழுவதும் பரவி விடும் எனவும் சுகாதார துறையினர் சுட்டிக்காட்டியுள்ளதாகவும் பசில் ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link