Type to search

Headlines Local News News

1 டிரில்லியன் ரூபாய் வருமான இலக்கை எட்டியது சுங்கத் திணைக்களம்!

Share

2026 ஆம் ஆண்டிற்கான ஒரு டிரில்லியன் ரூபாய் வருமான இலக்கை நேற்று முன்தினம் எட்டியுள்ளதாக இலங்கை சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டிற்காக சுங்கத் திணைக்களத்திற்கு வழங்கப்பட்ட மொத்த வருமான இலக்கு 2.206 டிரில்லியன் ரூபாயாகும். அதில் ஒரு டிரில்லியன் ரூபாய் வருமானத்தை நேற்று முன்தினம் நிலவரப்படி ஈட்ட முடிந்துள்ளதாக சுங்கத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

வருடத்தின் பாதியைக் கடப்பதற்கு முன்னரே இவ்வாறானதொரு பாரிய வருமான இலக்கை அடைய முடிந்தமை, சுங்கத் திணைக்கள வரலாற்றில் ஒரு விசேட மைல்கல் என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அரசின் வருமான இலக்குகளை அடைவதற்கு சுங்கத் திணைக்களம் வழங்கும் பங்களிப்பை இந்த வெற்றி மேலும் உறுதிப்படுத்துவதாக சுங்க ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். வருடத்தின் எஞ்சிய காலப்பகுதியிலும் நாட்டின் பொருளாதாரத்திற்கு மேலும் வலுசேர்க்கும் வகையில் வருமான இலக்குகளை அதிகரிப்பதே தமது எதிர்பார்ப்பு என்றும் சுங்கத் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link