Type to search

Headlines News World News

ஹார்முஸ் ஜலசந்தியில் சிங்கப்பூர் கப்பல் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்

Share

மஸ்கட் ஹார்முஸ் ஜலசந்தியில் சிங்கப்பூர் கப்பல் மீது ஈரான் தாக்குதல் நடத்திய சம்பவம் உலக நாடுகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

4 மாதங்களாக நீடித்து வந்த அமெரிக்கா ஈரான் இடையேயான போரை நிறுத்துவது தொடர்பான ஒப்பந்தம் அண்மையில் கையெழுத்தானது.

இந்த ஒப்பந்தத்தில் வளைகுடா பிராந்தியத்தில் இருந்து அமெரிக்க படைகளை விலக்குவது, 60 நாட்களுக்கு ஹார்முஸ் ஜலசந்தியில் எந்தவொரு கட்டணமும் இல்லாமல், பாதுகாப்பான சரக்கு கப்பல் போக்குவரத்தை உறுதி செய்வது போன்ற அம்சங்கள் இடம்பெற்றிருந்தன.

நேற்றைய தினம் இந்திய கப்பல்கள் உள்பட கச்சா எண்ணெய் சரக்குகளை 70க்கும் மேற்பட்ட கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாப்பாக கடந்து சென்றன.

இந்த நிலையில், ஓமனின் தஹித் கடற்கரை அருகே சிங்கப்பூர் கொடியுடன் சென்ற சரக்கு கப்பல் மீது ஈரான் ட்ரோன் தாக்குதலை நடத்தியுள்ளது.

இதில், கப்பலின் கட்டுப்பாட்டு அறை சேதமடைந்துள்ளதாக பிரிட்டனின் கடல்சார் வர்த்தக செயல்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. இந்தத் தாக்குதலில் எவருக்கும் காயமோ அல்லது சுற்றுச்சூழலுக்குப் பாதிப்போ ஏற்படவில்லை என்று கூறியுள்ளது.

இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து, பெர்சிய வளைகுடாவில் முடங்கியுள்ள பல கப்பல்களை வெளியேற்றுவதற்காக சில நாட்களுக்கு முன்பு ஐநாவின் சர்வதேச கடல்சார் அமைப்பு கொண்டு வந்த திட்டத்தை தற்காலிகமாக நிறுத்திவைப்பதாக அறிவித்துள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link