Type to search

Headlines News World News

ஸ்கை டைவிங் விமான விபத்து 12 பேர் பலி!

Share

அமெரிக்காவின் மிசோரி (Missouri) மாகாணத்தில் ஸ்கை டைவிங் (Skydiving) வீரர்களை ஏற்றிச் சென்ற சிறிய ரக விமானம் ஒன்று வயல்வெளியில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த 12 பேரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

மிசோரி மாகாணத்தின் பேட்ஸ் (Bates) நகரிலுள்ள விமான நிலையத்திலிருந்து ஸ்கை டைவிங் வீரர்களுடன் புறப்பட்ட சிறிய ரக விமானமே இவ்வாறு திடீரென விபத்துக்குள்ளாகியுள்ளது.

விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே கட்டுப்பாட்டை இழந்து, அருகில் இருந்த வயல்வெளிப் பகுதிக்குள் செங்குத்தாக விழுந்து நொறுங்கியுள்ளது. இந்த கொடூர விபத்தின் தாக்கத்தினால் விமானத்தில் பயணம் செய்த 12 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக்குழுவினர், பலியானவர்களின் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

விமானம் திடீரென விபத்துக்குள்ளானதற்கான காரணம் என்ன? ஏதேனும் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதா? அல்லது மோசமான வானிலை காரணமா? என்பது குறித்து அமெரிக்க விமானப் போக்குவரத்து அதிகாரிகள் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link