Type to search

Headlines Local News News

வேகக் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் – மூதூரில் பாடசாலை மாணவன் பலி

Share

திருகோணமலை – மூதூர் பொலிஸ் பிரிவிலுள்ள 64 ஆம் கட்டைப் பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

திருகோணமலை -மட்டக்களப்பு பிரதான வீதியில் நேற்றிரவு இவ் விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

இதில் மூதூர் -ஆணைச்சேனை பகுதியை சேர்ந்த 19 வயதுடைய றிஸ்வான் சிப்கி எனும் பாடசாலை மாணவனே உயிரிழந்துள்ளதுடன் அவருடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த மற்றுமொருவர் இளைஞரும் காயமடைந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளில் இரண்டு இளைஞர்களும் தோப்பூரிலுள்ள உணவகம் ஒன்றுக்கு சென்று மீண்டும் மூதூருக்கு வரும் வழியில் மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து பாதையை விட்டு விலகி இவ் விபத்துச் சம்பவம் இடம்பெற்றதாக தெரியவருகிறது.

விபத்தில் உயிரிழந்த இளைஞனின் ஜனாஸா மூதூர் தள வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், காயமடைந்த இளைஞனும் அதே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர் 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link