ரூ. 83 இலட்சம் பெறுமதியான சிகரெட்டுகளுடன் 3 சீன வர்த்தகர்கள் கைது!
Share
ரூபாய் 83 இலட்சத்து 70 ஆயிரம் பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளை, சட்டவிரோதமாக நாட்டிற்குள் கடத்தி வரமுற்பட்ட மூன்று வெளிநாட்டு விமானப் பயணிகள் இன்று (03) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் மற்றும் சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் 35, 38 மற்றும் 50 வயதுகளையுடைய சீன நாட்டு வர்த்தகர்கள் ஆவர்.
இவர்கள் இன்று (03) அதிகாலை 02.45 மணியளவில் மலேசியாவின் கோலாலம்பூர் நகரிலிருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் UL-319 என்ற விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
இதன்போது, அவர்கள் கொண்டு வந்த 06 பயணப் பொதிகளுக்குள் , சீனாவில் உற்பத்தி செய்யப்பட்ட 55,800 சிகரெட்டுகளைக் கொண்ட 279 சிகரெட்களை மறைத்து வைத்திருந்த போதே அவை கைப்பற்றப்பட்டதாக சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் இவர்களைத் தடுத்து வைத்து, இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


