கிழக்கு பல்கலைக்கழகத்தில் புதிய சேவை மற்றும் ஆதரவு மையம் நாளை திறப்பு!
Share
விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படும், அரச பல்கலைக்கழகங்களுடன் இணைந்ததாக சேவை மற்றும் ஆதரவு மையங்களை நிறுவும் வேலைத்திட்டத்தின் கீழ், மூன்றாவது மையம் நாளை (4) காலை 8.30 மணிக்கு கிழக்கு பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீடத்தில் திறந்து வைக்கப்படவுள்ளது.
விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் பேராசிரியர் கிரிஷாந்த அபேசேன மற்றும் கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி ஆகியோரின் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெறவுள்ளது.
இதற்கு இணையாக, கிழக்கு மாகாணத்தில் தெரிவு செய்யப்பட்ட 100 பாடசாலைகளுக்காக பாடசாலை விஞ்ஞான சங்கங்கள் மற்றும் கண்டுபிடிப்பாளர் கழகங்களை நிறுவும் ஆரம்ப விழா, சுவாமி விபுலாநந்தா கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.


