சட்டவிரோதமாக அலங்காரச் செடிகளை கடத்திய வர்த்தகர் கைது
Share
சட்டவிரோதமான முறையில் 7 இலட்சம் ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய அலங்கார செடிகளை நாட்டுக்குள் கொண்டு வந்த பயணி ஒருவர், விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
வெயாங்கொடை பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய வர்த்தகர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவர் இந்தியாவின் பெங்களூரு நகரில் இருந்து கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வருகை தந்துள்ளார்.
அவர் கொண்டு வந்த பயணப் பொதிகளுக்குள் இருந்து 229 அலங்கார செடிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


