Type to search

Headlines Local News News

இலங்கை வரவுள்ள மாலைதீவு ஜனாதிபதி

Share

ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவின் அழைப்பின் பேரில், மாலைதீவு ஜனாதிபதி கலாநிதி முகமது முய்சு எதிர்வரும் மே 03 முதல் மே 06 வரை இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.

இந்த விஜயத்தின் போது, இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் ஜனாதிபதி திஸாநாயக்கவுடன் அவர் உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தைகளை நடத்துவார்.

அத்துடன், பல துறைகளில் ஒத்துழைப்பை அதிகரிப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இரு தலைவர்களுக்கும் முன்னிலையில் கையெழுத்திடப்படவுள்ளன. ஜனாதிபதி முய்சுவுடன் அவரது பாரியார் சஜிதா முகமது மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்ட உயர்மட்டக் குழுவினரும் வருகை தரவுள்ளனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link