Type to search

Headlines News World News

அடுத்த ஆர்டெமிஸ் III விண்வெளி ஆய்வுக்கான விண்வெளி வீரர்கள் அறிவிப்பு

Share

நாசா நிறுவனம் தனது அடுத்த ஆர்டெமிஸ் விண்வெளி ஆய்வுப் பணிக்காக மூன்று அமெரிக்க விண்வெளி வீரர்களையும் ஒரு இத்தாலிய விண்வெளி வீரரையும் பெயரிட்டுள்ளது.

இரண்டு வாரங்கள் கொண்ட இந்த ஆர்டெமிஸ் III விண்வெளி ஆய்வுப் பயணம் சந்திரனுக்குச் செல்லாது என்றபோதிலும், எதிர்காலத்தில் விண்வெளி வீரர்களை சந்திரனின் மேற்பரப்புக்கு அழைத்துச் செல்வதற்காகப் பயன்படுத்தப்படும் இரண்டு பிரதான தரையிறங்கும் விண்கலங்களின் (landers) முதலாவது விண்வெளிப் பரிசோதனையாக இது கருதப்படுகிறது.

இந்த ஆய்வுப் பயணம், அடுத்த ஆண்டு பூமியின் சுற்றுப்பாதையில் வைத்து விண்கலங்களை ஒன்றிணைக்கும் (docking) ஒரு சிறப்புப் பரிசோதனையாகும்.

இதன்போது, ஸ்பேஸ் எக்ஸ் (SpaceX) நிறுவனத்தின் ‘ஸ்டார்ஷிப்’ (Starship) மற்றும் புளூ ஒரிஜின் (Blue Origin) நிறுவனத்தின் ‘புளூ மூன்’ (Blue Moon) ஆகிய சந்திரனில் தரையிறங்கும் விண்கலங்கள் முதன்முறையாக விண்வெளியில் பரிசோதிக்கப்படவுள்ளன.

ஹூஸ்டன் நகரில் நடைபெற்ற நிகழ்வொன்றில், நாசா நிறுவனத்தின் நிர்வாகி ஜாரெட் ஐசக்மேன் (Jared Isaacman) என்பவரால் அமெரிக்க விண்வெளி வீரர்களான ஆண்ட்ரே டக்ளஸ் (Andre Douglas), பிராங்க் ரூபியோ (Frank Rubio) மற்றும் ரேண்டி ப்ரெஸ்னிக் (Randy Bresnik) ஆகியோருடன் ஐரோப்பிய விண்வெளி முகமையின் இத்தாலிய விண்வெளி வீரரான லூகா பார்மிட்டானோ (Luca Parmitano) ஆகியோரின் பெயர்கள் இந்த அணியினராக அறிவிக்கப்பட்டன.

இதில் 58 வயதான ரேண்டி ப்ரெஸ்னிக் இந்த விண்வெளிப் பயணத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பதுடன், அவர் மூன்று விண்வெளிப் பயணங்களின் அனுபவத்தைக் கொண்ட ஒரு முன்னாள் பரிசோதனை விமானி (test pilot) ஆவார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link