இலங்கை அணி மற்றும் மேற்கிந்தியத் தீவுகளுக்கிடையிலான முதல் T20 போட்டி!
Share
சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணிக்கும் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கும் இடையிலான முதலாவது இருபதுக்கு-20 (T20) போட்டி, உள்ளூர் நேரப்படி நாளை (12) முற்பகல் 6.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
இப்போட்டி ஜமைக்காவின் ‘சபினா பார்க்’ (Sabina Park) கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இந்த போட்டியில் விளையாடவுள்ள இலங்கை அணி குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி அறிவிக்கப்பட்ட இலங்கை அணி குழாம்,
பெதும் நிஸ்ஸங்க, குசல் மெண்டிஸ், லசித் குரூஸ்புள்ளே, பவன் ரத்நாயக்க, கமிந்து மென்டிஸ், தசுன் சானக்க, வனிந்து ஹசரங்க, மஹீஷ் தீக்ஷன, துஷ்மந்த சமீர, எஷான் மாலிங்க மற்றும் டில்ஷான் மதுஷங்க ஆகியோர் இக்குழாமில் இடம்பெற்றுள்ளனர்.


