Type to search

Headlines Local News News

யாழ்.கலாசார மையத்தினை யாழ். மாநகரசபையின் பொறுப்பில் எடுக்க நடவடிக்கை

Share

யாழ்ப்பாணம்  கலாசார மையித்தினை யாழ்ப்பாணம் மாநகரசபையின் பொறுப்பில் எடுக்கும் நடவடிக்கையினை விரைந்து செய்ய வேண்டும் என யாழ் மானகர சபையில் ஏகமனதாக தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

யாழ் மாநகரின் மாதாந்த அமர்வு இன்றையதினம் முதல்வர் திருமதி மதிவதனி தலைமையில் நடைபெற்றது.

இதன்போது கலாசார மத்திய நிலையத்தின் பராமரிப்பு குறித்து விவாதிக்கப்பட்ட நிலையிலேயே இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

குறித்த தீர்மானத்தில்- 2014 ஆண்டு ஜூன் மாதம் ஒன்பதாம் திகதி கைச்சாத்திடப் பட்ட இரு தரப்பு உடன்படிக்கைக்கு அமைவாக பூர்த்தி செய்யப்பட்ட இந்த கட்டிடத்தை யாழ்ப்பாணம் மாநகரசபையிடம் விரைவாக கையளிக்க வேண்டும் எனவும்,

இதன் பொருட்டு எந்தவித நம்பிக்கை பொறுப்பு கட்டமைப்பு (TRUST) உருவாக்கப் படுவதற்கு இந்த சபை உடன்படவில்லை எனவும்,இலங்கைக்கான மதிப்பார்ந்த இந்திய உயர் ஆணையர் அவர்களையும், புத்தசாசன, சமய மற்றும் கலாசார அமைச்சர் அவர்களையும் கோருவதென யாழ் மாநகரசபை தீர்மானித்துள்மை குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link