Type to search

Headlines Local News News

ஹெரோயின் வைத்திருந்த நபருக்கு ஆயுள் தண்டனை

Share

ஹெரோயின் போதைப்பொருள் 3.074 கிராம் வைத்திருந்த குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் காணப்பட்ட ஒருவருக்கு அனுராதபுரம் மாகாண மேல் நீதிமன்றம் நேற்று (30) ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

இவ்வாறு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவர் கெக்கிராவை வீதி, தலாவ பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய நபராவார்.

இந்த வழக்கு நான்கு வருடங்களுக்கும் மேலாக அனுராதபுரம் மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்த நிலையில், முறைப்பாட்டாளரால் சந்தேகத்திற்கு இடமின்றி குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதை அடுத்து, நேற்றய தினம் உரிய தீர்ப்பு அறிவிக்கப்பட்டு, எதிரிக்கு இவ்வாறு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

தலாவ பொலிஸ் நிலையத்துடன் இணைந்த உப பொலிஸ் பரிசோதகருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையிலேயே இந்த போதைப்பொருள் முற்றுகை மேற்கொள்ளப்பட்டது.

அதற்கமைய, தலாமா பொலிசாரின் தலைமை பொலிஸ் பரிசோதகர் உள்ளிட்ட பொலிஸ் அதிகாரிகள் குழுவினால் சம்பந்தப்பட்ட சந்தேக நபர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link