Type to search

Headlines Local News News

வெனிசுலா நிலநடுக்கம் – உயிரிழப்பு 2,295 ஆக உயர்வு!

Share

வெனிசுலாவைத் தாக்கிய மிக மோசமான நிலநடுக்கம் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,295 ஆக உயர்ந்துள்ளது.

பாதிக்கப்பட்டவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகள் இன்று (02) ஏழாவது நாளாகவும் தொடரும் நிலையில், காணாமல் போனவர்களைக் கண்டறிவதிலும் இடம்பெயர்ந்தவர்களுக்கு நிவாரணம் வழங்குவதிலும் அந்நாட்டின் புதிய அரசாங்கம் பெரும் சவாலை எதிர்கொண்டுள்ளது.

கடந்த ஜூன் 24ஆம் திகதி 39 வினாடிகள் இடைவெளியில் வெனிசுலாவின் வடக்கு-மத்திய பகுதியில் ரிக்டர் அளவுகோலில் 7.2 மற்றும் 7.5 ரிக்டர் அளவிலான இரண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. வெளியிடப்பட்டுள்ள புதிய அறிக்கைகளின்படி, இந்த அனர்த்தத்தில் 11,267 பேர் காயமடைந்துள்ளதுடன், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,295 ஆகும்.

பிரதான நிலநடுக்கத்தைத் தொடர்ந்து 782 அதிர்வுகள் பதிவாகியுள்ள போதிலும், அவற்றின் வீரியம் படிப்படியாகக் குறைந்து வருவதாகப் பதிவாகியுள்ளது. தற்போது பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் 4,000க்கும் மேற்பட்ட சர்வதேச மீட்புப் பணியாளர்களும், வெனிசுலா இராணுவம், பொலிஸார், தீயணைப்புப் படையினர் உட்பட 26,000 பேரும், 17,800க்கும் மேற்பட்ட தன்னார்வலர்களும் நிவாரணப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link