வீதி விபத்துகளால் 1,297 பேர் பலி!
Share
2026ஆம் ஆண்டின் கடந்த ஐந்தரை மாத காலப்பகுதியில் மாத்திரம் இடம்பெற்ற வீதி விபத்துக்களினால் 1,297 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தகவல் வெளியிட்டுள்ளது.
கடந்த ஜனவரி மாதம் 1 ஆம் திகதி முதல் ஜூன் மாதம் 16 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் நாடு முழுவதும் பதிவான விபத்துத் தரவுகளின் அடிப்படையிலேயே குறித்த விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இவ்விபத்துக்களில் உயிரிழந்தவர்களில் பெரும்பான்மையானோர் பாதசாரிகளும் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களுமே ஆவர்.
இக்காலப்பகுதியில் வீதிகளில் நடந்து சென்ற 448 பாதசாரிகள் விபத்துக்களில் சிக்கி உயிரிழந்துள்ளதுடன், 444 மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் உயிரிழந்துள்ளனர்.
மேலும், வாகனங்களில் பயணித்த 124 பயணிகள், 109 வாகன சாரதிகள், 85 சைக்கிள் ஓட்டுநர்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களின் பின் இருக்கையில் பயணித்த 84 பேர் விபத்துக்களால் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


