Type to search

Headlines News Sports

வடமாகாண குத்துச்சண்டைப் போட்டியில் மல்லாவி மத்திய கல்லூரி முதலிடம்!

Share

வடமாகாண பாடசாலைகளுக்கிடையிலான குத்துச்சண்டைப் போட்டியில் 5 தங்கம், 3 வெள்ளி மற்றும் 4 வெண்கலப் பதக்கங்கள் என மொத்தம் 12 பதக்கங்களை வென்று, பெண்கள் பிரிவில் முதலாம் இடத்தைப் பெற்று முல்/மல்லாவி மத்திய கல்லூரி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.

கடந்த 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் யாழ்ப்பாணம் பருத்தித்துறையில் நடைபெற்ற வடமாகாண பாடசாலைகளுக்கிடையிலான குத்துச்சண்டைப் போட்டியில் முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த மல்லாவி மத்திய கல்லூரியின் ஆண் மற்றும் பெண் மாணவர்கள் பங்கேற்றனர்.

இப்போட்டியில் 5 தங்கம், 3 வெள்ளி மற்றும் 4 வெண்கலப் பதக்கங்களை வென்றதுடன், மாகாண மட்ட பெண்கள் குத்துச்சண்டைப் போட்டியில் முதலாம் இடத்தையும் கைப்பற்றி பாடசாலைக்கும், துணுக்காய் கல்வி வலயத்திற்கும், முல்லைத்தீவு மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளனர்.

மேலும் இம்மாணவ வீர வீராங்கனைகளுக்கான பயிற்சிகளை தேசிய மட்ட வீரர்களை உருவாக்கிய முன்னாள் தேசிய குத்துச்சண்டை வீரர் வள்ளுவன் மாஸ்டர் மற்றும் தேசிய மட்டப் பதக்கங்களை வென்ற இந்துகாதேவி ஆகியோர் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மாணவர்களின் இவ்வெற்றிக்கு பாடசாலை சமூகம், பெற்றோர்கள் மற்றும் பழைய மாணவர்கள் தமது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link