மன்னாரில் இரு படகுகள் மோதி விபத்து: மீனவர் உயிரிழப்பு
Share
மன்னார், வங்காலைப்பாடு கடல் பகுதியில் இன்று அதிகாலை 4 மணியளவில் மீன்பிடிக்கச் சென்ற இரண்டு படகுகள் எதிர்பாராத விதமாக ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளாகின. வங்காலைப்பாடு மற்றும் காட்டாஸ்பத்திரி பகுதியைச் சேர்ந்த மீனவர்களின் படகுகளே இவ்வாறு விபத்திற்குள்ளாகின.
இந்த மோதலில் படகுகள் பலத்த சேதமடைந்ததோடு, அதிலிருந்த மீனவர்கள் கடலில் தூக்கி வீசப்பட்டனர். இதில் காணாமல் போன காட்டாஸ்பத்திரி பகுதியைச் சேர்ந்த மீனவர், சக மீனவர்களின் தேடுதலுக்குப் பின் சடலமாக மீட்கப்பட்டார். மற்றுமொரு மீனவர் காயமடைந்த நிலையில் மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் குறித்து பொலிஸாரும் மீன்பிடித் திணைக்கள அதிகாரிகளும் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். இந்தத் துயரச் சம்பவம் மன்னார் மீனவ மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


