Type to search

Headlines Local News News

நுளம்பு குடமிகளுடன் சூழலைப் பேணிய 19 பேருக்கு எதிராக சட்டநடவடிக்கை

Share

நிலவும் கடுமையான டெங்கு அபாயத்தைக் கருத்திற்கொண்டு, மாத்தறை மாவட்டத்தின் அத்துரலிய சுகாதார அதிகாரி பிரிவிற்குட்பட்ட சுமார் 300 வீடுகள் மற்றும் அரச நிறுவனங்கள் நேற்று (08) பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. 

இதன்போது, நுளம்பு குடமிகள் காணப்பட்ட சூழலைப் பேணி வந்த 19 பேருக்கு எதிராக சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு, நீதிமன்றில் விபரங்களை அறிக்கை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

அத்துடன், நும்புகள் பெருகக்கூடிய அசுத்தமான இடங்களைக் கொண்டிருந்த 30 வளாகங்கள் மற்றும் வீடுகளுக்கு இறுதிச் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அத்துரலிய சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது. 

அத்துரலிய மற்றும் திப்பத்துவாவ ஆகிய நகரங்களை அண்டிய அதிக மக்கள் தொகை கொண்ட வலயங்களில் பெருமளவிலான நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். 

இவ்வாறானதொரு பின்னணியில், அக்குரஸ்ஸ மற்றும் அத்துரலிய நகரங்களின் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள வேளைகளில் புகை விசிறல் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link