Type to search

Headlines Local News News

தெதுறு ஓயாவில் மாயமாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6ஆக உயர்வு!

Share

குருநாகல் – நிக்கவரெட்டிய – தெதுரு ஓயாவில் நீராடச்சென்று காணாமல் போன மேலும் நால்வரின் உடலங்கள் மீட்கப்பட்டுள்ளன

தெதுறு ஓயாவில் நேற்று வியாழக்கிழமை (16) நீராடச் சென்ற 15 பேரில் 10 பேர் நீரில் மூழ்கி விபத்துக்குள்ளானார்கள்.

நீரில் மூழ்கி காணாமல் போனவர்களில் மேலும் 4 பேரின் சடலங்கள் இன்று (17) மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன் மூலம், இந்த அனர்த்தத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில், மேலும் காணாமல்போயுள்ள 2 பேரைத் தேடும் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link