Type to search

Headlines Local News News

டிஜிட்டல் வாகன காப்புறுதி – பொலிஸார் விசேட அறிவிப்பு!

Share

மே முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில், டிஜிட்டல் மோட்டார் வாகன காப்புறுதி அட்டைகளை வழங்குவது தொடர்பாக பொலிஸாரால் விசேட அறிவிப்பொன்று வெளியிடப்பட்டுள்ளது.

இலங்கை காப்புறுதி ஒழுங்குமுறைப்படுத்தல் ஆணைக்குழு, இலங்கை காப்புறுதிச் சங்கம் மற்றும் காப்புறுதித் துறையின் ஏனைய பங்குதாரர்கள் இணைந்து எடுத்த தீர்மானத்திற்கு இணங்க, காப்புறுதி நிறுவனங்களினால் மோட்டார் வாகன காப்புறுதிப் பத்திரங்களுக்குப் பதிலாக இந்த டிஜிட்டல் காப்புறுதி அட்டைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, தேசிய காப்புறுதி சரிபார்ப்பு அமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதுடன், பின்வரும் முறைகள் மூலம் அதனை அணுக முடியும்:

  • SMS மூலம்
  • QR குறியீடு மூலம்
  • இணையதளம் மூலம்

இந்த முறைகளைப் பயன்படுத்தி மோட்டார் வாகன காப்புறுதியின் செல்லுபடியாகும் தன்மையை சரிபார்க்க முடியும் எனவும் அந்த அறிவிப்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link