Type to search

Headlines Local News News

செம்மணியில் 3 சிறுவர்கள் உட்பட மேலும் 11 எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுப்பு!

Share

செம்மணி மனிதப் புதைகுழியில் இருந்து நேற்றுமுன்தினம் (5), மூன்று சிறுவர்களுடைய எலும்புக்கூட்டுத் தொகுதிகள் உட்பட மேலும் 11 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. 

செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணியின் 17ஆம் நாள் அகழ்வுப் பணிகள் நேற்றுமுன்தினம் நடைபெற்றன. 

அதன்போது 13 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில், ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட எலும்புக்கூட்டுத் தொகுதிகளிலிருந்து சிறுவர்களுடைய மூன்று எலும்புக்கூட்டுத் தொகுதிகள் உட்பட 11 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. 

இதேவேளை, செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரையில் நடைபெற்ற அகழ்வுப் பணிகளின் போது, 296 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவற்றுள் 290 எலும்புக்கூடுகள் முற்றாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. 

அத்தோடு, இன்றைய அகழ்வுப் பணிகளின் போது, எலும்புக்கூடு ஒன்றுடன் தகர வடிவிலான பொருள் ஒன்றும் மீட்கப்பட்டு, அது சான்றுப் பொருளாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. 

நேற்றய தினம் (06)அகழ்வுப் பணிகள் இடம்பெறாது எனவும், இன்று மீண்டும் அகழ்வுப் பணிகள் தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link