Type to search

Headlines Local News News

வன அலுவலக ஊழியர் ஒருவரின் சடலம் கிணற்றில் இருந்து மீட்பு

Share

கிளிநொச்சியில் வனவளத் திணைக்களத்தில் கடமையாற்றும் அதிகாரியொருவரின் சடலம் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

காணாமல் போயிருந்த வன அலுவலக ஊழியர் ஒருவரின் சடலம், அந்த அலுவலகத்திற்கு அருகிலுள்ள கிணறு ஒன்றிலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.


குறித்த நபர் கடந்த 05ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாகக் கிடைத்த முறைப்பாட்டிற்கு அமைவாக, ஜெயபுரம் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் போதே இந்தச் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.


விசாரணை அதிகாரிகள் பொலிஸ் மோப்ப நாய்களின் உதவியுடன் நடத்திய தேடுதலின் போது, அந்த அலுவலகத்தின் பின்புறத்தில் இருந்து காணாமல் போன நபரின் கைபேசி கண்டெடுக்கப்பட்டது.


அதனைத் தொடர்ந்து அதற்கு அருகிலிருந்த கிணற்றை பரிசோதித்த போதே அவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர் தம்புத்தேகம பகுதியைச் சேர்ந்த 41 வயதுடைய நபராவார்.


சடலம் நீதவான் விசாரணைக்காக சம்பவ இடத்திலேயே பொலிஸ் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளதுடன், ஜெயபுரம் பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link