Type to search

Headlines Local News News

சட்டவிரோதமாக நாட்டில் தங்கியிருந்த 50 வெளிநாட்டவர்கள் கைது

Share

வர்த்தக விசா  மூலம் நாட்டிற்கு வருகை தந்து, அவற்றின் காலாவதித் திகதி முடிந்த பின்னரும் சட்டவிரோதமான முறையில் தங்கியிருந்த 50 வெளிநாட்டவர்கள் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று (21) பிற்பகல் இக் கைது இடம்பெற்றுள்ளது. 

கைது செய்யப்பட்ட வெளிநாட்டவர்களில் 47 சீனப் பிரஜைகளும், இரண்டு மலேசியப் பிரஜைகளும், ஒரு இந்தியப் பிரஜையும் அடங்குகின்றனர்.

நீர்க்கொழும்பு பிரதேசத்திலுள்ள வீடொன்றில் இவர்கள் தங்கியிருந்த போது, குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் புலனாய்வுப் பிரிவுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகத்தின் ஆலோசனையின் பேரில் இந்த சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட வெளிநாட்டவர்கள் வெலிசர தடுப்பு நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளதுடன், அவர்களை விரைவில் நாடுகடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link