Type to search

Headlines Local News News

குமார ஜயகொடியின் வழக்கு விசாரணை ஆரம்பம்

Share

ஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக முன்னாள் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் விசாரணை இன்று (17) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் ஆரம்பமானது.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரஷாந்த கொடவெல முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, பிரதிவாதியான முன்னாள் அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிரான குற்றச்சாட்டுகள் திறந்த நீதிமன்றத்தில் வாசித்துக் காட்டப்பட்ட வேளையில், தான் குற்றமற்றவர் என அவர் நீதிமன்றத்தில் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து வழக்கின் சாட்சி விசாரணைகள் ஆரம்பமாகின.

கடந்த 2016ஆம் ஆண்டு லங்கா உர நிறுவனத்தின் கொள்வனவு முகாமையாளராகப் பணியாற்றிய காலத்தில், அந்த நிறுவனத்தின் களஞ்சிய வளாகத்தில் கார்பெட் விரிக்கும் ஒப்பந்தத்தை தனியார் நிறுவனம் ஒன்றுக்கு சாதகமான முறையில் வழங்கியதன் மூலம், அரசாங்கத்திற்கு 8,859,708 ரூபாய் நட்டத்தை ஏற்படுத்தியதாகக் கூறி இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் முன்னாள் அமைச்சருக்கு எதிராக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link