அதிக விலைக்கு கீரி சம்பா விற்ற வர்த்தகருக்கு 1 இலட்சம் ரூபா அபராதம்!
Share
கீரி சம்பா அரிசியை நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்த குற்றத்தை ஒப்புக்கொண்ட திருகோணமலை பிரதேசத்தைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவருக்கு, திருகோணமலை நீதிவான் நீதிமன்றம் கடந்த (24) ஆம் திகதி 100,000 ரூபா அபராதம் விதித்துள்ளது.
நுகர்வோரை அசௌகரியத்திற்கு உள்ளாக்கும் இவ்வாறான சட்டவிரோத செயல்களைத் தடுப்பதற்காக, நுகர்வோர் விவகார அதிகாரசபை (CAA) நாடளாவிய ரீதியில் தொடர்ச்சியான சோதனைகளை முன்னெடுத்து வருகின்றது.
நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்யும் வர்த்தகர்களிடமிருந்து பொருட்களை வாங்குவதைத் தவிர்க்குமாறும், அத்தகைய வர்த்தக நிலையங்களைப் புறக்கணிக்குமாறும் நுகர்வோர் விவகார அதிகாரசபை பொதுமக்களைக் கேட்டுக்கொள்கிறது.


