பொருளாதாரத்தை நோக்கி இளைஞர்களை வழிப்படுத்துங்கள்
Share
பொருளாதாரம் பற்றிய விழிப்புணர்வு இல்லாத நாடு – மக்கள் முன்னேற்றமடைந்ததான வரலாறு இல்லை.
ஆக, பொருளாதாரம் பற்றிய சிந்தனைகள் அது தொடர்பான தேடல்கள் நம் இளம் சந்ததியிடம் ஏற்பட வேண்டும்.
உண்மையில் நமது இலங்கை போன்ற நாடுகள் இன்னமும் அபிவிருத்தியடைய முடி யாமல் இருப்பதற்குக் காரணம் பொருத்தமான முதலீடுகள் – பொருத்தமான வேலைவாய்ப்புகள் மேற்கொள்ளப்படாமையாகும்.
ஆம், இலங்கையில் எந்தப் பல்கலைக் கழகத்தில் பட்டம் பெற்றாலும் பட்டம் பெற்றவர் கள் அரச வேலைக்காகக் காத்திருக்கின்றனரெனில், நிலைமை எப்படி என்பதை ஊகித்துக் கொள்வதில் கடினமிருக்க முடியாது.
தவிர, பட்டதாரிகள் என்போர் அரச அலுவலகங்களில் கோவைகளுடனும் கணனி களுடனும் காலம் போக்குகின்ற பணிகளைச் செய்வதிலேயே விருப்பம் கொண்டுள்ளனர்.
உண்மை. பல்கலைக்கழகப் பட்டத்தை நிறைவு செய்துவிட்டு விவசாய முயற்சிகள், கால்நடை வளர்ப்புகள், உள்ளூர் உற்பத்திகளை ஏற்றுமதி செய்கின்ற ஏற்பாடுகள் என எதிலும் அவர்கள் ஆர்வம் காட்டுவதில்லை.
இதனால் ஒரு படித்த இளம் சமூகத்தின் அருமந்த மனித மணித்தியாலங்கள் வீணா கிப் போகின்றன.இவ்வாறான நிலைமைகளால் எங்கள் சுயபொருளாதாரம் வலுக்குறைந்து போகிறது.
ஆம், பனை எங்கள் வட மாகாணத்தின் பெரும் வளம் என்கிறோம். ஆனால் பனை வளத்தைக் கொண்டு பனங்கட்டி, பதநீர், பனாட்டு, ஒடியல், புளுக்கொடியல் ஆயவற்றை பெருமளவில் உற்பத்தி செய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்ற முயற்சியில் நம் பட்டதாரிகள் யாரேனும் ஈடுபட்டுள்ளனரா? எனில் எவரும் இல்லை என்பதுதான் அதற்கான விடை.
ஏன்? நம் பட்டதாரிகள் ஒன்றாக இணைந்து ஒரு நிறுவனமாகச் செயற்பட்டேனும் பனை சார் உற்பத்திகளை பெருக்கி அவற்றை உலக சந்தைக்கு அனுப்புகின்றபோது அதனால் உள்ளூர் மக்களும் நிறைந்த நன்மையும் பொருளாதார பலமும் அடைவர்.
ஆனால் அதற்கான எந்த முயற்சிகளோ அல்லது அத்தகைய முயற்சிகளில் இளை ஞர்களை ஈடுபடுத்துவதற்கான ஊக்குவிப்புகளோ, நிறுவனம் சார்ந்த ஒத்துழைப்புகளோ எதுவும் இல்லை.
ஆக, சொந்தப் பனையைத் தறிப்பதற்கு பனை அபிவிருத்திச் சபைக்குக் கட்டணம் செலுத்துகின்ற பரிதாப நிலையிலேயே பனை வைத்தவன் பாடு உள்ளது.
எனவே எமது பொருளாதாரத்தை வலுப்படுத்தும் வகையில் தொழில் முயற்சிகளை ஆரம்பிப்பதற்கு நம் இளைஞர்களை – பட்ட தாரிகளை வழிப்படுத்தவும் வளப்படுத்தவும் வேண்டும்.
இதைச் செய்யும்போதுதான் எங்கள் பொரு ளாதாரம் பலமடையும்.
வலம்புரியின் ஆசிரியர் தலையங்கம்


