Type to search

Editorial

எங்கள் பற்றைக் காணிகளும் பராமரிக்காத பண்பாடுகளும்

Share

நில வளம் என்பது வாழும் உயிர்களுக் கெல்லாம் முதன்மையானது.

ஆம், நீரின்றி அமையாது உலகு எனக் கூறப்பட்டதற்குள் நிலம் அடிப்படை என்றா கிறது.

எனினும் நம் தாயகத்தில் பராமரிப்பு எதுவு மில்லாமல் பற்றைக் காணிகளாகக் காணப் படுகின்ற நிலங்கள் ஏராளம்.

காணி உரிமையாளர்கள் இருந்தும் காணிகளில் பற்றைகள் வளர்ந்து நிற்கின்றன வெனில், மற்றவர்கள் தொடர்பில் – அயலில் வசிப்பவர்கள் பற்றி எந்தக் கருசனையும் சம்பந்தப்பட்ட காணி உரிமையாளர்களுக்கு இல்லை என்றே கூற வேண்டும்.

உண்மையில் பற்றைகளாகக் காணப்படுகின்ற அத்தனை காணிகளும் துப்பரவு செய்ய வேண்டும் என்பதை உள்ளூராட்சி சபைகள் வலியுறுத்தி அதனை அமுல்படுத்த வேண்டும்.

தவிர, பராமரிப்பின்றி இருக்கக்கூடிய வெற்றுக் காணிகள் தொடர்பில் அந்தந்த உள்ளூராட்சி சபைகள் நடவடிக்கை எடுத்திருந்தால், உரிய காணிகளின் உரிமையாளர்கள் அவற்றைப் பராமரிக்கத் தலைப்பட்டிருப்பர். அல்லது உரிமை கோராமல் விட்டிருப்பர்.

உரிமை கோரப்படாத காணிகளை உள்ளூராட்சி சபைகள் சுவீகரிக்க முடியும்.

இங்குதான் ஒரு விடயத்தை உள்ளூராட்சி சபைகள் கவனத்தில் எடுக்க வேண்டும்.

அதாவது, தற்போது நீதிமன்றங்களில் வழக்குகளில் உள்ள காணிகள் மற்றும் சட்டவிரோதமாகக் காணிகளை விற்றமை தொடர்பான வழக்குகள் அதிகரிப்பதற்கு ஏதோவொரு வகையில் சம்பந்தப்பட்ட உள்ளூராட்சி சபைகளும் காரணம் என்பதை இங்கு கூறித்தானாக வேண்டும்.

ஆம், வெற்றுக் காணிகள் அல்லது கவனிப்பாரற்றுக் கிடக்கின்ற காணிகளை சிலர் கண் காணிக்கின்றனர். அவ்வாறு கண்காணிப்பவர்கள் ஒரு கட்டத்தில் குறித்த காணிக்கு கள்ள உறுதி முடித்து அதனை விற்று விடுகின்றனர்.

இதற்கு சில சட்டத்தரணிகளும் ஒத்துழைப் பாக இருக்கின்றனர்.

இங்குதான் சம்பந்தப்பட்ட காணிகள் தொடர்பில் பிரதேச சபைகள் உள்ளிட்ட உள்ளூராட்சி மன்றங்கள் உரிய நடவடிக்கை எடுத்திருந்தால், களவாகக் காணி விற்கின்ற கலாசாரம் எங்கள் வடபுலத்தில் உச்சம் தொட்டிருக்காது.

எனவே அனைத்து உள்ளூராட்சி சபைகளும் தத்தம் எல்லைகளுக்குள் பற்றைகள் நிறைந்துள்ள காணிகளை இனங்கண்டு அவை தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதன்மூலம் குறித்த பிரதேசம் தூய்மையாவதுடன் குறித்த காணியில் ஏதேனும் பயிர் செய்ய வேண்டும் என்ற சிந்தனையும் உரியவர்களிடம் எழுகை பெறலாம்.

ஆம், மன மாற்றங்கள் ஊடாகவே முன்னேற்றங்களும் ஏற்படுகின்றன என்ற உண்மையை யாரும் மறந்தும் மறுத்தும் விடாதீர்கள்.

வலம்புரியின் ஆசிரியர் தலையங்கம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link