Type to search

Editorial

அரபிக் குதிரையாயினும் பிறவிக் குணம் மாறாது

Share

ஓர் ஊரில் மிகப்பெரும் அக்கிரமங்களும் அநீதிகளும் தலைவிரித்தாடுகின்றன.

நிலைமை கட்டுக்கடங்காமல் போகவே நபிகள் நாயகம் தனது தூதுவர்களை அனுப்பி அந்த ஊரை அழித்து விடுமாறு கூறுகிறார்.

நபிகள் நாயகத்தின் கட்டளைகளை ஏற்று அந்த ஊரை அழிக்க தூதுவர்கள் அங்கு செல்கிறார்கள். அந்த ஊரில் ஒரு பெரிய பள்ளிவாசல், அங்கு ஒரு பெரியவர் ஐந்து நேரமும் தொழுகையில் ஈடுபட்ட வண்ணம் உள்ளார்.

அவரைக் கண்ட தூதுவர்கள் அந்தப் பெரியவரையும் அழிக்க வேண்டுமா? சதா வழிபடும் அவரை எப்படி அழிப்பது என்ற சந்தேகம் மேலிட, மீளவும் நபிகள் நாயகம் இருக்கும் இடத்திற்குச் சென்ற தூதுவர்கள்; இறையீர்! நீங்கள் கூறியபடி அந்த ஊரை அழிக்க அங்கு சென்றோம்.

ஒரு பெரியவர் உங்களை நினைத்த வண்ணம் தொழுகையில் ஈடுபட்டுக் கொண்டே இருக்கிறார். அவரையும் கொல்வதா? என்று கேட்டார்கள்.அதற்கு நபிகள் நாயகம் அவரைத்தான் முதலில் கொல்லுங்கள் என்றார். தூதுவர்கள் அதிர்ந்து போயினர்.

அதற்கு நபிகள் நாயகம் சொல்கிறார்; அந்த ஊரில் அநீதியும் அக்கிரமமும் தலை விரித்தாடும் போது, அதனைத் தடுத்து நிறுத்தி, தர்மத்தை எடுத்துக் கூற வேண்டிய அந்தப் பெரியவர் தனது கடமையைச் செய்யாமல் தொழுகையில் ஈடுபடுவதால் என்ன பயன். ஆகையால் அவரை முதலில் கொல் லுங்கள் எனக் கட்டளையிடுகிறார்.

இந்தக் கதையை நாம் கூறும்போது, இஃது இப்போது எதற்கு என்று நீங்கள் யாரேனும் கேட்கலாம்.

ஆம், கடந்த இரு தினங்களுக்கு முன்னர் பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் ஆற்றிய உரையைப் பார்த்தபோதுதான் மேற்போந்த கதை ஞாபகத்திற்கு வந்தது.

ஆம், ரோகண விஜயவீரவைக் கொன்ற போது அவரது மகனைப் பாதுகாத்த அரசு, ஈஸ்டர் குண்டுத்தாக்குதலில் தற்கொலைத் தாக்குதலை நடத்திய சஹரானின் மகளைக் காப்பாற்றிய அரசு, தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச் சந்திரனைக் கொன்றது ஏன்?

இவ்வாறு பாலச்சந்திரனை சுட்டுக் கொன்றது யுத்தக் குற்றமாகும். அதனை யுத்தக்குற்றமாக விசாரிக்க வேண்டும் எனக் கோரியுள்ளார்.

அட, வன்னி யுத்தத்தில் அப்பாவித் தமிழ் மக்கள் கொத்துக் கொத்தாக கொன்றொழிக்கப்பட்ட போது – சுமார் மூன்று இலட்சம் தமிழ் மக்கள் முட்கம்பி வேலிக்குள் அடைக் கப்பட்ட போதெல்லாம் அன்றைய அரசாங்கத்திற்கு முண்டு கொடுத்த ரவூப் ஹக்கீம் இப்போது நீலிக்கண்ணீர் வடிப்பது தான் ஆச்சரியமாக இருக்கிறது.

அதுமட்டுமல்ல ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்குச் சென்று இலங்கையில் யுத்தக் குற்றம் இடம்பெறவில்லை எனக் கூறியவர் இதே ரவூப் ஹக்கீம்.

உண்மை. அன்று பேரினவாத ஆட்சியாளர்கள், நம் தமிழ் மக்களைக் கொன்று குவித்த போது மௌனமாக இருந்த ரவூப் ஹக்கீம் உள்ளிட்ட முஸ்லிம் அரசியல் தலைவர்கள் நம் தமிழினத்திற்குச் செய்த துரோகத்தனத்தை தமிழினம் ஒருபோதும் மறந்துவிட மாட்டாது என்பதை இவ்விடத்தில் நினைவுபடுத்தும் அதேவேளை, அரபிக் குதிரையா யினும் பிறவிக் குணம் மாறாது என்ற தமிழ்ப் பழமொழியையும் ரவூப் ஹக்கீமுக்கு ஞாப கப்படுத்த விரும்புகிறோம்.

வலம்புரியின் ஆசிரியர் தலையங்கம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link