யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பண்பாட்டு நுழைவாயிலில் தீபங்கள் ஏற்றி நேற்று முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இடம்பெற்றது. பொலிஸாரின் தடையை மீறி நேற்று இரவு 7 மணியளவில் தீபங்கள் ஏற்றி அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன. யாழ்.பல்கலைக் கழகத்தின் மாணவர்கள் உட்செல்லும் வாயிலில் பொலிஸார் ஒரு மணி நேரமாக காத்திருக்க, பல்கலை கழக பிரதான ...
பொலிஸாருடன் முரண்பட்ட இருவரை முழங்காலில் அமர்த்தி இராணுவம் தாக்கிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் நேற்று மாலை மருதனார்மடத்தில் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் தெரியவருவதாவது, நேற்று மாலை மருதனார் மட சந்திக்கு அருகிலுள்ள முச்சக்கர வண்டி தரிப்பிடத்தில் இரு நபர்கள் தமக்குள் முரண்பட்டுள்ளனர். இருவருக்கு இடையில் வாக்கு ...
நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை நாடு முழுவதும் ஊரடங்குச்சட்டம் அமுலில் இருக்கும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது. இது தொடர்பில் ஜனாதிபதி ஊடகப்பிரிவு அனுப்பி வைத்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய இரு மாவட்டங்களிலும் ஊரடங்குச் சட்டம் மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும் அமுலில் இருக்கும். ...
மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்தை எதிர்வரும் திங்கட்கிழமை முதல் ஆரம்பிக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாகவும் அது குறித்த பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாவும் போக்கு வரத்து சேவைகள் அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்தார். அத்தியாவசிய மற்றும் அவசர கடமைகளுக்கு வர முயற்சிப்போருக்கான விசேட ஏற்பாடுகள் செய்துகொடுக்கப்படும் எனவும் அவர் கூறினார். பொதுப்போக்குவரத்து நடைமுறைகளை ...
கொரோனா தொற்று நோய்க்குப் பின்னர் கல்வியில் இழந்த வாய்ப்புகளைப் பிடிக்க வாரத் தின் ஏழு நாட்களும் பாடசாலைகளை நடத்துவது தொடர்பில் கல்வி அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது என்று கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார். சிறிய குழுக்களாக வகுப்புகள் நடத்தப்படும் என்பதால் ஏழு நாட்களும் ஆசிரியர்கள் அல்லது மாணவர்கள் ...
நல்லூர் பிரதேச சபை ஊழியர் ஒருவர் மீது நேற்று வாள் வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் படுகாயமடைந்த அவர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதில் சுன்னாகம் புகையிரத நிலைய வீதியைச் சேர்ந்த தே. நடேசு (வயது- 44) என்பவர் மீதே வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இவர் ...
நாட்டில் 2009 ஆம் ஆண்டு இடம்பெற்ற இறுதி யுத்தத்தில் இறந்த மக்களுக்கான நினைவுத் தூபி அடங்கிய நினைவாலயம் ஒன்றினை அமைப்பதற்கு கரைச்சி பிரதேச சபையில் நேற்று இடம்பெற்ற அமர்வில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. குறித்த தீர்மானத்தில் நினைவாலயம் கிளிநொச்சி நகரப்பகுதியில் பிரதேச சபையின் ஆளுகைக்குள் உள்ள பசுமைப் பூங்காவில் அமைப்பதற்காகவும் ...
ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படும் அனைத்து மாவட்டங்களிலும் தனியார் மற்றும் இ.போ.ச பேருந்து மற்றும் தொடருந்து சேவைகள் இன்று முதல் அனைத்து வழிகளிலும் செல்ல அனுமதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார நடை முறைகளைப் பின்பற்றி ஆசனங்களை ஒதுக்கீடு செய்து இந்த சேவையை வழங்கப்படவேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் ...
தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க நடவடிக்கை எடுப்பேன் என பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். எம்.ஏ.சுமந்திரனுடனான சந்திப்பின்போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அனுப்பி வைத்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடக பேச்சாளரும் யாழ் மாவட்ட முன்னாள் பாராளுமன்ற ...