கொரோனா வைரஸ் ஆபத்து காரணமாக கடும் கட்டுப்பாடுகளை விதித்திருந்த நாடுகள் அந்த கட்டுப்பாடுகளை தளர்த்திய பின்னர் வைரஸ் தொற்றியவர்கள் அடையாளம் காணப்படுவது அதிகரித்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இவ்வாறான ஆபத்து அதிகரித்துள்ள நாடுகளாக சீனா, தென் கொரியா மற்றும் ஜேர்மனி ஆகிய நாடுகள் கடந்த வாரம் அடையாளப்படுத்தப்பட்டன. ...
மோட்டார் சைக்கிளில் வந்த வாள்வெட்டுக்குழுவினரால், மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டில் இருவர் படுகாயமடைந்ததுடன், மோட்டார் சைக்கிள் மற்றும் ஆட்டோ அடித்து நொருக்கப்பட்ட சம்பவம் ஒன்று நேற்று நல்லூர் முத்திரைச் சந்திப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. ஊரடங்கு தளர்த்தப்பட்டு சில மணி நேரங்களில் இந்த சம்பவம் வாள்வெட்டுக் குழு வினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளமை மக்கள் மத்தியில் ...
இரண்டாம் தவணைக் கல்வி நடவடிக்கைகளுக்காக பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு இன்னும் ஒரு மாத காலமாகலாம் என கல்வி அமைச்சர் டலஸ் அழகப் பெரும தெரிவித்துள்ளார். மாத்தறை மாவட்ட செயலகத்தில் நேற்று திங்கட்கிழமை இந்த விடயம் குறித்து கருத்து தெரிவித்த அவர், சுகாதார அதிகாரிகளின் பரிந்துரையின் அடிப்படையிலேயே பாடசாலைகள் மீண்டும் ...
முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கைவேலிப் பகுதியில் நேற்றைய தினம் காணி ஒன்றில் இருந்து விடுதலைப் புலிகளின் சீருடைகள் மீட்கப்பட்டுள்ளன. அந்த நிலத்தில் இருந்து பெட்டி ஒன்று கண்டெடுக்கப்பட்டதாகவும், அது குறித்து காணி உரிமையளார் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார். இதனையடுத்து, குறித்த இடத்திற்கு சென்ற பொலிஸார் அந்த ...
இலங்கைக்கான விமான சேவைகளை எதிர்வரும் ஜூன் மாதம் முதல் மீண்டும் ஆரம் பிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார். எனினும் நாட்டுக்குள் வரும் சகல பயணிகளையும் பரிசோதனை செய்யும் விசேட வேலைத் திட்டம் குறித்து அரசாங்கம் ஆராய்ந்து வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். விமான சேவைகளை ...
சுகாதார அமைச்சின் செயலாளராக முன்னாள் இராணுவ அதிகாரியான மருத்துவர் நியமிக்கப்பட்டுள்ளார் என்று அரச தகவல்கள் தெரிவிக்கின்றன. நாட்டில் கொரோனா தொற்று பரம்பலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் முற்று முழுதாக முப்படையினரை ஈடுபடுத்தி வந்த நிலையில் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் மருத்துவ நிபுணர் சஞ்ஜீவ முனசிங்க சுகாதார அமைச்சின் செயலாளராக ...
கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 9 பேர் நேற்று ஞாயிற்றுக்கிழமை அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது. இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 856 ஆக (ஜனவரியில் பாதிக்கப்பட்ட சீனப் பெண் உட்பட) அதிகரித்துள்ளது.
அனைத்து மாவட்டங்களிலும் இன்று திங்கட்கிழமை முதல் அரச மற்றும் தனியார் நிறுவனங்களை கட்டுப்பாட்டுடன் திறப்பதாக அரசு அறிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பாக நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்துள்ள இராணுவத் தளபதி சவேந்திர சில்வா இந்த காலப்பகுதியில் பொதுமக்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். ஊரடங்குச் ...
கோவிட் – 19 என்ற கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ள பொதுத் தேர்தலை நடத்துவதா இல்லையா என்பது குறித்து நாளை 12ஆம் திகதி தீர்மானம் எடுக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக் குழுவின் தகவல்கள் தெரிவிக்கின்றன. தேர்தல்கள் ஆணைக்குழு நாளைய தினம் அதன் தலைவர் மகிந்த தேசப்பிரிய ...
கொரோனா வைரஸ் பரவியுள்ள பின்னணியில் பொதுத் தேர்தலைவிட பொதுமக்களின் பாதுகாப்பே முக்கியமானது என ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறியுள்ளார். ஐக்கிய தேசியக் ...