Type to search

Headlines

உங்கள் சந்தேகங்கள்

Share

எனது வயது 51, ஒன்பது மாதங்களுக்கு முன் RBS செய்தபோது 209mg/dl ஆக இருந்தது. HbA1C டெஸ்ட் 7.7 ஆக இருந்தது. அன்றிலிருந்து சுமார் 6 மாதங்கள் நான் கடுமையான உடற்பயிற்சி செய்து வந்தேன். ஒவ்வொரு கிழமையும் இரத்தப் பரிசோதனை செய்து வந்தேன். FBS சராசரியாக 121 இல் இருந்தது. மீண்டும் HbA1C டெஸ்ட் செய்த போது 6.7 ஆக இருந்தது. எனது தற்போதைய உடல் நிறை 60 kg, உயரம் 170cm. எனக்கு உண் மையில் சலரோக நோய் இருக் கிறதா? எனக்கு இது சம்பந்தமான வைத்திய ஆலோசனை தருவீர்களா?

முதலில் உங்களுடைய நிலை சலரோக நிலையா? அல்லது சலரோகத் திற்கு முந்திய நிலையா? எனப் பார்ப்போம். சலரோகத்திற்கு முந்திய நிலையின் போது சாப்பாட்டிற்கு முன்னராக குருதிக் குளுக்கோசின் அளவு 100 mg/dl -125 mg/dl இற்கும் இடை யிலும் HbA1C ஆனது 5.7 – 6.4 இற்கும் இடையிலும் இருக்கும் HbA1C ஆனது 6.5 இற்கு மேற்பட்டி ருப்பின் அது சலரோகநோய் உள்ளதாக கொள்ளப்படும். உங்களிற்கு சல ரோக நோய் உள்ளது. Metformin என்ற மாத்திரை தொடங்க வேண்டும்.

உங்களுடைய தற்போதைய உடற் திணிவுச் சுட்டியானது 22.49 kgm-2 ஆக உள்ளது. ஒருவருடைய உடற் திணிவுச் சுட்டியானது 18.5 – 23 எனும் அளவினுள் இருக்கலாம். எனவே உங்களுடைய நிறை சாதா ரண அளவிலேயே உள்ளது. எனவே நீங்கள் வேகமான நடை, ஓடுதல், மிதி வண்டி செலுத்துதல், நீந்துதல ;போன்ற காற்றுப் பயிற்சியினை நாளொன்றிற்கு 30 நிமிடங்கள் செய்வது சிறந்தது. அத்துடன் உணவுக் கட்டுப்பாட்டினைக் கடைப்பிடிப்பதன் மூலம் உங்களின் ஆரோக்கியத்தைப் பேண முடியும்.

எனக்கு வயது 30 நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளேன். எனது உடல் மெலிவடைந்து போகின்றது. நான் எவ்வளவு காலம் வாழலாம்?

நீரிழிவுநோய் ஏற்பட்டுள்ளது என் பதற்காக மனமுடைந்து போக வேண் டிய அவசியமில்லை. இளவயதில் நீரிழிவு ஏற்படுவது தற்போது பொது வான ஒரு விடயமே. இதனைப் பூரண மாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவும், இதனால் ஏற்படும் தாக்கத்தைக் குறைக் கவும் பலவிதமான நல்ல மருத்துவ முறைகள் கண்டறிப்பட்டுள்ளன.

சரியான மருத்துவ ஆலோசனை யைக் கடைப்பிடித்து இளவயதில் கண்டறியப்பட்ட பல நோயாளர்கள் ஆரோக்கியமாக வாழ்ந்து வருகின் றார்கள். எனவே நீங்களும் மன ஊக்கத்துடன், உங்களின் வைத்திய ஆலோசனைகளுக்கமைய நடந்து கொண்டால் பாரதூரமான தாக்கங்கள் ஏதுமின்றி நீண்டகாலம் சாதாரண வாழ்க்கை வாழ முடியும்.

எனக்கு 45 வயது. மலச்சிக்கல் உள்ளது. இதனால் உடலில் பல பிரச் சினைகள் ஏற்படுகின்றன. இதற்கு சரியான தீர்வு சொல்லுங்கள்.

மலச்சிக்கல் எனப்படுவது ஒரு வாரத் தில் 03 தடவைகளுக்கு குறைவாக மலம்களித்தல் அல்லது மலத்தின் கடினத்தன்மை அல்லது மலம் கழித்த லிலுள்ள கடினத்தன்மை அல்லது பூர ணமாக மலம் கழிக்கவில்லை என்ற உணர்வு என வரையறை செய்யலாம்.

பொதுவாக மலச்சிக்கலானது முறை யற்ற உணவுப் பழக்கங்கள், நீர் அருந் துதல் போதாமை, ஒழுங்கற்ற முறை யில் மலங்கழிக்க செல்லுதல் போன்ற வற்றினால் ஏற்படலாம். இவற்றை விட சில மருத்துவ காரணங்களாலும் மலச் சிக்கல் ஏற்படலாம். உதாரணமாக தைரொக்சின் குறைபாடு, வேறு சில மாத்திரைகள் பயன்படுத்துதல், வேறு குடல் சம்பந்தமான நோய்கள் போன்ற வையாகும்.

எனவே நீங்கள் மலச்சிக்கலை தவிர்ப்பதற்கு ஒவ்வொரு நாளும் குறைந் தது 2 லீற்றர் நீராவது அருந்த வேண் டும். உங்கள் உணவில் அதிகளவு நார்ப்பொருள் உள்ள உணவுகளை, பழங்கள், மரக்கறிகளை அதிக அளவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இவ ற்றைவிட நீங்கள் தினமும் குறித்த ஒரே நேரத்தில் மலங்கழிக்க செல்ல உங் களை பழக்கப்படுத்திக் கொள்ள வேண் டும். இவ்வாறு செய்துவர உங்கள் மலச்சிக்கல் நீங்கும். இவற்றைவிட நீங்கள் வேறு ஏதாவது மலச்சிக்கலை ஏற்படுத்தக்கூடிய மாத்திரைகளை பயன் படுத்தினால் அவை பற்றி உங்கள் வைத்தியரிடம் கேட்டு அவற்றை தவிர் த்துக் கொள்ளுங்கள். இவற்றுக்கு உங்கள் மலச்சிக்கல் குணமடையாது விடின் வைத்தியரை நாடி உங்களிற்கு மேற்குறிப்பிட்டது போன்று வேறு ஏதா வது காரணங்கள் உண்டா? என்று அறிந்து அவற்றிற்கு உரிய சிகிச்சையை பெற்றுக்கொள்ள வேண்டும்.

நீங்கள் உடலில் பல பிரச்சினைகள் ஏற்படுகின்றது என குறிப்பிட்டுள்ளீர்கள். ஆனால் அவை என்ன என குறிப்பிடப் படவில்லை. உங்களிற்கு மலச்சிக்க லுடன் நிறை அதிகரித்தல், பசியின்மை, குளிரை தாங்க முடியாமை, தோல் உலர்வடைந்து காணப்படல், பகலில் நித்திரைத் தூக்கம், தலைமுடி உதிர்த் தல் போன்றன காணப்படின் இவை தைரொயிட் குறைபாட்டிற்குரிய அறி குறிகளாகும். எனவே நீங்கள் வைத் தியரை நாடி அதற்கு உரிய சிகிச்சை பெற்றுக் கொள்வது சிறந்தது.

வயது 32. ஆண் தற்போது தான் திருமணம் முடித்தேன். ஆனால் எனக்கு நீரிழிவு நோய் உள்ளது. இதனால் குழந்தை பெறுவதில் சிக்கல் இருக்குமா?


நீரிழிவு நோயை தகுந்த முறையில் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதன் மூலம் ஏனைய சுகாதரப் பிரச்சினைகள் ஏற்படுவதைக் குறைக்க முடிவதைப் போலவே, பாலியல் சம்பந்தமான பிரச்சினைகளையும் பெருமளவில் தவிர்த்துக் கொள்ள முடியும். எனவே குழந்தைகள் பெற்றுக் கொள்வதிலும் பிரச்சினைகள் இருக்கப் போவதில்லை.

நீங்கள் இது சம்பந்தமாக மனக் குழப்பம் அடையத் தேவையில்லை. நீரிழிவை மருத்துவ ஆலோசனை களுக்கமைய கட்டுப்பாட்டுக்குள் வைத் திருப்பதன் மூலம் அநாவசிய பிரச்சினைகளைத் தவித்துக் கொள்ளலாம்.

நான் 32 வயதுடைய பெண். எனது நிறை 75 kg, உயரம் 157cm எனக்கு முடி உதிர்தல் பிரச்சினைக்காக வைத்தியரிடம் ஆலோசனை பெற்ற போது FBS -101.9mg/dl ஆக இருந்தது. அதனை ஒரு வைத்தியர் நீரிழிவு இல்லை எனவும் இன்னொரு வைத் தியர் நீரிழிவு முன்னிலை (prediabetic) எனவும் கூறினர். நீரிழிவு தொடர்பான எனது உடல் நிலையைத் தெளிவுபடுத்துமாறு கேட்டுக் கொள் கின்றேன்.

உங்களது உடற் திணிவு சுட்டி 30.42 kgm-2. சாதாரணமான உடற் திணிவு சுட்டி 18-23kgm-2) என்ப தால் உங்களது உடல் நிறையை நியம மட்டத்தில் பேணுவது அவசிய மானதாகும். இரு வைத்தியர்களும் சரியாகத்தான் கூறியிருக்கிறார்கள். prediabetic முன்னிலை என்பது FBS பெறுமானம் 100 -126 mg/dl இருக்கும் நிலையாகும். நீங்கள் உங்களது உடல் நிறையை நியம மட்டத்தில் பேணுவதனூடாக அதா வது உணவுக்கட்டுப்பாடு, போதிய உடற்பயிற்சி என்பவற்றின் மூலம் உங்களுக்கு எதிர்காலத்தில் நீரிழிவு நோய் ஏற்படுவதையும் நீரிழிவினால் ஏற்படக் கூடிய பாதிப்புக்களையும் தாம திக்க முடியும். நீங்கள் பேண வேண் டிய உடல் நிறை 57-54 kg ஆகும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link