பயம் பக்தி இஃதிரண்டும் சேர்ந்து பயபக்தி யாகிற்று. பயபக்தி என்பது மிகவும் முக்கியமானது. தனித்து பயமோ அன்றி தனித்த பக்தியோ மீட்சியைத் தரமாட்டா. ஆம், கடவுள் மீது பயபக்தி இருக்க வேண்டும். கடவுளிடம் பக்தியை மட்டும் கொண்டி ருப்போமாயின், அஃது செருக்காக மாறும். திருவிளையாடல் படத்தில் வருகின்ற ஹேமநாத ...
சூரியக்கல மின் உற்பத்தி தொடர்பான விளம்பரப் பதாகைகள் வடக்கிலுள்ள அத்தனை மின்சார சபை அத்தியட்சகர் அலுவலகங்களிலும் காட்சிப்படுத்தப்பட்டன. ஆரம்பகட்டங்களில் சோலர் பயன்பாடு பற்றிய புரிதல் இன்மையால் அது வியத்தில் அவசரப்படாத நம் வடமாகாண மக்கள் பின்னர் சூரியக்கல மின் உற்பத்தியில் நாட்டம் கொண்டனர். இதில் இலங்கை மின்சார சபையில் ...
ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் அரசாங்கம் வடக்கு மாகாணத்தை ஓரங்கட்டி விட்டது போன்றதான தோற்றப்பாடு தெரிகிறது. ஆம், ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தென்பகுதி மாகாணங்களுக்கு நேரில் சென்று அங்குள்ள உயர் அதிகாரிகளிடம் வேலைத் திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடுகிறார். கூடவே அவர்களிடம் கேள்விகளை முன்வைத்து தென் மாகாணங்களின் அரச ...
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவப் பீடத்தில் வெசாக் கூடுகள் சேதமாக்கப்பட்ட விவகாரம் பேசுபொருளாகியது. யாழ்.பல்கலைக்கழகத்தில் வெசாக் கூடுகள் சேதமாக்கப்பட்டன என்ற செய்தி சிங்கள மாணவர்களிடத்தும் தென்பகுதி மக்களிடத்தும் ஏற்படுத்தக்கூடிய தாக்கம் சாதாரணமானதன்று. ஆம், யாழ்.பல்கலைக்கழக முகாமைத்துவப் பீடத்தில் அமைக்கப்பட்ட வெசாக்கூடுகள் சேதமாக்கப்பட்டன என்ற செய்தி வெறுமனே “சேதம்” என்பதோடு நின்று ...
அரசாங்கத்திற்கு எதிராகத் தமிழ் மக்கள் செயற்படுகிறார்கள் என்ற சந்தேக மனப்பாங்குடன் நுணுகி நுணுகி ஆராய்வதே அரச புலனாய்வுத் துறையின் பணியாக உள்ளது. அதாவது தமிழ் மக்களை எதிரிகளாகவும் அவர்கள் இந்த நாட்டின் பிரஜைகள் அல்ல என்பது போலவுமே புலனாய்வுத்துறையின் செயற்பாடுகள் அமைகின்றன. உண்மையில் தமிழ் மக்களை எதிரிகளாகப் பார்க்காமல், ...
யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா அவர்களை வரவேற்பதில் மகிழ்வடைகின்றோம். இந்தியத் தூதுவரின் யாழ்ப்பாண வருகை என்பது பல வழிகளிலும் முக்கியத்துவம் வாய்ந்தது. இன்னமும் தீர்க்கப்படாத ஈழத் தமிழ் மக்களின் பிரச்சினைக்கான தீர்வு தொடக்கம் எங்கள் கடற்பரப்பில் அத்துமீறி நுழைகின்ற இந்திய மீனவர்கள் ஈறாக, பல்வேறு ...
“சேவை” என்ற சொற்பதம் வந்துவிட்டால் அங்கு மக்களின் நலன் பற்றிய நினைப்பு முதன்மை பெற வேண்டும். எனினும் நம் நாட்டைப் பொறுத்தவரை “சேவை” என்ற சொல்லின் மகிமையை சம்பந் தப்பட்ட உத்தியோகத்தர்கள் மறந்து, தங்களின் சுயநலன் பற்றியே சிந்திக்கின்றனர். இதன் காரணமாகவே, எங்கள் நாட்டில் சேவைகள் துறை தோல்வியுற்ற ...
அநுராதபுரம் அட்டமஸ்தானாதிபதி பல்லேகம தேரர் தொடர்பில் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் மனித மனங்களை எரித்துக் கருக்கவல்லன. ஆம், ஓர் அப்பாவிச் சிறுமியை வன்புணர்வு செய்த குற்றச்சாட்டு சாதாரணமானதன்று. புத்தபிரானின் போதனைகளை இவ் வையகத்தின் கண் உபதேசம் செய்வதற்காக புனிதமான துறவு வாழ்வை மேற்கொண்ட பௌத்த துறவிகள், பாவகாரியம் செய்யும் மனித ...
என் சிறுவயதில் கம்யூனிஸ்ட் குமாரசாமி எனும் சிறுகதையைப் படித்த ஞாபகம் உண்டு. ஆம், சிறுகதையை எழுதியவர் யார் என்பது எனக்கு ஞாபகம் இல்லை. ஆனால் ஒரு சிறுகதைத் தொகுப்பில் அந்தக் கதை இடம்பெற்றிருந்தமை நினைவில் உண்டு. கதை வருமாறு; கம்யூனிஸ்ட் குமாரசாமி என்பவர் ஒரு நிறுவனத்தில் பணியாற்றுகி றார். ...
யாழ்ப்பாணம் பொஸ்கோ வித்தியாலயத்தில் முதலாம் வகுப்பில் கற்கின்ற தனது ஆறு வயதுப் பாலகனை தாயார் முச்சக்கரவண்டியில் ஏற்றிக்கொண்டு பலாலி வீதியால் பயணிக்கின்றார். திருநெல்வேலிப் பகுதியை அண்மித்த வேளை, பலாலி வீதியால் யாழ். நோக்கி வேக மாக வந்த மினிபஸ் வீதியை விட்டு விலகி, ஆட்டோவை மோதித்தள்ள அந்தோ! ஆறு ...