தேவையில்லாத வேலையை ஒருவர் செய்வாராயின் தேவையுள்ள வேலையை செய்ய முடியாமல் போகும். ஆம், நம் தமிழ் அரசியலில் நடந்த பல விடயங்கள் தேவையில்லாதவை. அதன் காரணமாக இன்று நம் தமிழர் அரசியல் பலயீனப்பட்டு, சுயமரியாதையை இழந்து நிற்கிறது. என்னதான் அரசியலாக இருந்தாலும் பழிச்சொற்களும் கடும் வார்த்தைகளும் எவரையும் சுடும். ...
நம் நாட்டில் யுத்தம் நடந்து கொண்டிருந்த போது அதன் காரணம் குறித்தும் விளைவுகள் குறித்தும் ஆய்வு செய்த சர்வதேச தொண்டு நிறுவனம் ஒன்று தனது அறிக்கையில், இலங்கையில் பத்திரிகைப் பயங்கரவாதமே உள்ளது எனக் குறிப்பிட்டிருந்தது. அதாவது இலங்கையில் சிங்கள தமிழ் இனங்களுக்கிடையே மோதல்கள் ஏற்படுவதற்கும் சமாதானம் ஏற்படுவதைத் தடுப்பதிலும் ...
சிலப்பதிகாரத்தைத் தந்த இளங்கோவடிகள் தான் படைக்கும் காப்பியத்தின் நோக்கத்தைத் தெளிவுபடுத்துகிறார். ஆம், “அரங்காவல் படைத்தோர்க்கு அறம் கூற்றாகும்” – “ஊழ்வினை ஊறுத்து வந்து ஊட்டும்” – “உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர்”. இம் மூன்று விடயங்களையும் எடுத்துக் கூறும் பொருட்டே சிலப்பதிகாரம் எனும் செய்யுளைப் படைக்கின்றான் என்கிறார். தனது ...
ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் அரசாங்கம் என்பது இந்த நாட்டில் மக்கள் புரட்சி ஏற்பட்டதன் பின்பாக அமையப்பெற்றதாகும். ஆம், கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த போது இந்த நாட்டில் பெரும் மக்கள் புரட்சி வெடித்தது.ஜனாதிபதி மாளிகையை மக்கள் சூழ்ந்து கொண்டனர். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ படைத்தரப்பின் ...
செம்மணி மனிதப் புதைகுழியில் இருந்து அகழ்ந்தெடுக்கப்படும் என்புக் கூடுகளின் எண்ணிக்கையை நினைக்கும்கால், எங்கள் தமிழினத்திற்கு நடந்த கொடுமை எத்தகைய தென்பதை அறிய முடியும். ஆம், செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இருந்து 350 இற்கும் மேற்பட்ட மனித என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டு அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இவ்வகழ்வுப் பணிகள் யாழ்ப்பாண நீதிவான் ...
இறவாத பேறு தரும் அமிர்தத்தைப் பெறும் பொருட்டு தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைகின்றனர். மந்தர மலையை மத்தாகவும் வாசுகி எனும் பாம்பை நாணாகவும் கொண்டு தேவர்கள் ஒரு பக்கமும் அசுரர்கள் மறுபக்கமுமாக நின்று வாசுகிப் பாம்பை இழுத்து இழுத்துப் பாற்கடலைக் கடைகின்றார்கள். நம் புராணக் கதைகளில் தேவர்களும் அசுரர்களும் ...
ஓர் ஊரில் மிகப்பெரும் அக்கிரமங்களும் அநீதிகளும் தலைவிரித்தாடுகின்றன. நிலைமை கட்டுக்கடங்காமல் போகவே நபிகள் நாயகம் தனது தூதுவர்களை அனுப்பி அந்த ஊரை அழித்து விடுமாறு கூறுகிறார். நபிகள் நாயகத்தின் கட்டளைகளை ஏற்று அந்த ஊரை அழிக்க தூதுவர்கள் அங்கு செல்கிறார்கள். அந்த ஊரில் ஒரு பெரிய பள்ளிவாசல், அங்கு ...
தமிழ்த் திரைப்பட உலகில் இயக்குநர் இமயமாக விளங்கிய பாரதிராஜா 10.06.2026 அன்று காலமானார் என்ற செய்தி அறிந்து ஈழத்தமிழ் மக்கள் சொல்லொணாத் துயரடைகின்றனர். தமிழகத் திரைப்படங்களில் அரும்பெரும் சாதனைகளை படைத்த பாரதிராஜா நாட்டுப்புறக் கதைகளை படங்களாகத் தருவதில் தனக்கு நிகர் தானே என்பதை நிரூபித்தவர். தமிழ்த் திரையுலகின் மூத்த ...
நம் முன்னவர்கள் கூறி வைத்த தத்துவங்கள், பொன்மொழிகள், பழமொழிகள் ஆன எவையும் பொய்த்தவை அல்ல. ஆம், முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்பதன் உள்ளார்ந்தம் ஊள்வினைப் பயன்களும் என்பதாகும். இதுபோல ஐயன் வள்ளுவன் நமக்குத் தந்தருளிய திருக்குறள், தமிழ் மூதாட்டி ஒளவையார் நமக்கீந்தளித்த நீதி செயல்கள், பட்டினத்தடிகளின் நிலையாமைத் ...
செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வின் போது புதிது புதிதாகக் கண்டறியப்படும் மனித என்புத் தொகுதிகளின் எண்ணிக்கைகளை அறியும் போது, குருதி உறைந்து போகிறது. அந்தளவிற்கு செம்மணி மனிதப் புதைகுழி மிகப்பயங்கரமானதாக உள்ளது. உண்மை. செம்மணியில் மனிதப் புதைகுழி உண்டென கிருசாந்தி கொலை வழக்கில் மரண தண்டனை பெற்றிருந்த லான்ஸ் ...