Type to search

Editorial

எங்கும் அவலச் சம்பவங்கள் காரணத்தைக் கண்டறிவரோ!

Share

ஊடகங்களில் நாளாந்தம் வெளிவருகின்ற செய்திகளைப் பார்க்கும்போது இதயம் கருகிப் போகிறது.அந்தளவுக்கு இயத்தை எரிக்கவல்ல கொடும் செயல்கள் சர்வசாதாரணமாக நடந் தேறுகின்றன.

மூன்று பிள்ளைகளைக் கிணற்றுக்குள் வீசிக் கொன்றுவிட்டு, தானும் தற்கொலை செய்ய முயன்ற தாய்.

எட்டு மாதக் குழந்தையைக் கதறக் கதற அடித்துத் துன்புறுத்திய பெற்றவள்.

இளம் பெண்ணின் தலையை வெட்டி கொய்துவிட்டு, தூக்கில் தொங்கி உயிர் மாய்த்த சப்இன்ஸ்பெக்டர் .

தன் குடும்பத்தில் குழப்பத்தை ஏற்படுத்திய வரை காரால் மோதி பின் குத்திக் கொன்ற கொடூரம்.

உறவுக்கார இளைஞன் கூரிய ஆயுதத்தால் குத்தியதில் பலியான சிறுவன்.
என்பதான அவலச் செய்திகள் நீண்டு செல்கின்றன.


அடிப்படை வசதிகள், தகவல் தொடர்பாடல் வசதிகள், அரச உதவித் திட்டங்கள், கல்வி மற்றும் சுகாதார மருத்துவ வசதிகள்.சிறுவர் காப்பகங்கள், முதியோர் இல்லங்கள், ஆற்றுப்படுத்தும் நிலையங்கள், வெளிக்கள உத்தியோகத்தர்களின் சேவைகள், சிறுவர் உரிமைச் சட்டங்கள் என ஏகப்பட்ட சமூக நலத்திட்டங்கள் அமுலில் இருக்கின்ற வேளையில்,
தற்கொலைகளும் கொலைகளும் விபத்துக்களும் கண்டபாட்டில் அதிகரித்துள்ளன எனில், இதற்கான காரணம் என்ன என்று கண்டறிவது யார் பொறுப்பு?
என்பதுதான் நம் முன்னெழுந்துள்ள கேள்வி.
பொதுவில் தற்கொலை மரணங்கள் நம் வடபுலத்தில் சர்வசாதாரணமாக நடந்தாகின்றன.


அதிலும் இளம் வயதினர், இளம் குடும்பஸ் தர்கள் விரக்தியின் எல்லைக்குச் சென்று உயிரை மாய்த்து விடுகின்ற முடிவுக்கு வருகின்றனர் எனில், இதற்கான பரிகாரங்கள் என்ன என்று சிந்திக்கப்படுகின்றதா? என்பது தான் புரியாமல் உள்ளது.

சில காலங்களுக்கு முன்னர் கடன் தொல்லைகளும் மீற்றர் வட்டிக் கடன்களும் நுண் கடன்களை வசூலிப்பவர்கள் கொடுத்த பாலியல் ரீதியான தொல்லைகளும் தற்கொலை களைத் தூண்டியிருந்தன.
இப்போது அந்தத் தொல்லைகள் குறைவடைந்துள்ளனவாயினும் தற்கொலை மரணங்கள் குறைந்தபாடில்லை.
இதற்கு மேலாக இப்போது கொலைச் சம்பவங்களும் தலைவிரித்தாடுகின்றன.
நிலைமை இவ்வாறாக இருக்கையில்; இச்சம்பவங்கள் வெறும் செய்திகளாக வெளிவந்து, பொதுமக்களின் மனங்களை வருத்தி பின்னர் அதுவே மனவக்கிரத்தை ஏற்படுத்திவிட, தற்கொலைகளும் கொலைகளும் சர்வசாதாரணமாகிவிடும்.
ஆகையால் இதுபற்றிய ஆய்வுகளும் ஆக வேண்டிய காரியங்களும் நடைமுறைக்கு வருவதை சம்பந்தப்பட்டவர்கள் பொறுப்புடன் செய்தாக வேண்டும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link