Type to search

Editorial

புதிய அரசியலமைப்பும்; ஜெனிவாவும் ஆளுக்கொரு உபயம் வேண்டாம்

Share

இப்போது தமிழ் அரசியல் தரப்புகள் இரண்டு முக்கிய விடயங்களை எதிர்கொண்டுள்ளன.
அதில் ஒன்று ஜெனிவா கூட்டத் தொடரில் ஈழத் தமிழர்களின் பிரச்சினைகளைக் கையா ளுதல் என்ற விடயம்.

மற்றையது புதிய அரசியலமைப்புக்கான முன்மொழிவுகளை முன்வைத்தல்.

மேற்குறித்த இரண்டு விடயங்களும் கவனமாகக் கையாளப்பட வேண்டும். அதிலும் ஜெனிவாவைக் கையாளுதல் என்பதில் எங்களின் அணுகுமுறைகளே எங்களுக்கான சாதகத் தன்மையைத் தீர்மானிக்கும்.

ஆகையால் அது விடயத்தில் மிகத் தெளிவான படிமுறைகளை நாம் ஒழுங்குபடுத்துவது அவசியம்.

இதுதவிர, தயாரிக்கப்படவுள்ள புதிய அரசியலமைப்புக்கான முன்மொழிவுகளைச் சமர்ப்பிக்குமாறு அரசாங்கம் கோரியுள்ளது.

இனப்பிரச்சினைக்கான தீர்வைத் தரக் கூடியதும் இலங்கையில் அனைத்து மக் களும் சம உரிமையுடன் வாழக்கூடியதுமான அரசியல் அமைப்பினைத் தோற்றுவிப்பது அவசியமாகும்.

இதை நாம் கூறும்போது, நாங்கள் வழங்குகின்ற முன்மொழிவுகளை அரசாங்கம் ஏற்கப் போகிறதா என்ன? என்ற கேள்விகள் எழலாம்.

ஆனால் கேள்விகளைக் கடந்து, நாங்களும் புதிய அரசியலமைப்புக்கான முன் மொழிவுகளை வழங்க வேண்டும் என்பது தான் இங்கு முக்கியமானது.

ஆக, ஜெனிவாவைக் கையாளுதல், புதிய அரசியலமைப்புக்கான முன்மொழிவுகளை தயாரித்தல் என்ற இரு பெரும் விடயங்கள் எம் முன் எழுந்துள்ளபோது, இதனை நாம் எவ்வாறு கையாளப் போகின்றோம் என்பது பற்றிச் சிந்திப்பது கட்டாயமானது.

இங்குதான் தனித் தனியாக உபயம் செய்யாமல் அனைத்துத் தமிழ் அரசியல் தரப்புகளும் ஒன்றுபட்டு செயற்பட வேண்டும்.

மாறாக மேற்குறித்த இரு விடயங்களையும் தனித்தனியாகக் கையாளுவது என் றால், அஃது எங்களுக்குள்ளேயே முரண் பாடுகள் இருப்பது உலகுக்குத் தெரிவிக்கப்படும்.

தவிர, தமிழ் மக்களின் உரிமை என்பது தான் இங்கு பிரதானமானது.

ஆகவே, தமிழ் மக்கள் சார்ந்த விடயத்தில் சுய அரசியல் நலன் பற்றி யார் சிந்தித்தாலும் அஃது தமிழினத்துக்குப் பாதகமாக அமையு மேயன்றி வேறில்லை.

எனவே ஜெனிவாவைக் கையாளுதல், புதிய அரசியலமைப்புக்கான முன்மொழிவுகளை வழங்குதல் என்ற விடயத்தில் வீக்க தூக்கங்களைப் பாராது, அரசியல் பேதங்களை முன்னிறுத்தாது, எம் தமிழினம் வாழ வேண்டும் என்ற ஒரே இலக்குடன் ஒருமித்துப் பயணிப்பதுதான் எங்களுக்கான விமோ சனத்தை அடையும் பாதையாகும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link