இறக்குமதி செய்யப்பட்ட கீரி சம்பா (கீரி பொன்னி) அரிசியை நிர்ணயிக்கப்பட்ட கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்த முல்லேரியா பகுதியில் உள்ள பிரபல சூப்பர் மார்க்கெட் ஒன்றுக்கு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் கடந்த திங்கட்கிழமை (18) 5 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது. நுகர்வோர் விவகார ...
அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே, கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இன்று (20) முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார். தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் வைக்கப்பட்டுள்ள நிலையிலேயே அவர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளுக்கு அமைவாக, சுரேஷ் ...
சம்மாந்துறையில் 33 லீற்றர் கசிப்புடன் கைதான பெண் சந்தேக நபரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை புறநகர் பகுதியான வீரமுனை 03 பகுதியில் செவ்வாய்க்கிழமை (19) மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போது தன்வசம் வைத்திருந்த 33 ஆயிரம் மில்லி லீற்றர் கசிப்புடன் 40 வயதுடைய ...
திருகோணமலை – மூதூர் பொலிஸ் பிரிவிலுள்ள 64 ஆம் கட்டைப் பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். திருகோணமலை -மட்டக்களப்பு பிரதான வீதியில் நேற்றிரவு இவ் விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதில் மூதூர் -ஆணைச்சேனை பகுதியை சேர்ந்த 19 வயதுடைய றிஸ்வான் சிப்கி எனும் ...
பொகவந்தலாவ பேருந்து நிலையத்திலிருந்து ஹட்டன் நோக்கிப் பயணிக்கத் தயாராக இருந்த தனியார் பேருந்தின் சில்லில் சிக்குண்டு குடும்பஸ்தர் ஒருவர் இன்று காலை 9.30 மணியளவில் உயிரிழந்துள்ளார். பொகவந்தலாவ பேருந்து நிலையத்திலிருந்து ஹட்டன் நோக்கிப் பயணிக்கத் தயாராக இருந்த தனியார் பேருந்தை இயக்கச் செய்துவிட்டு, அதன் சாரதி கீழே இறங்கியுள்ளார். ...
யாழ்ப்பாணம் மாநகர சபையின் புதிய ஆணையாளராக இலங்கை நிர்வாக சேவையைச் சேர்ந்த சிரேஷ்ட அதிகாரி டி.சி.அரவிந்தராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. புதிதாக நியமிக்கப்பட்ட யாழ்ப்பாணம் மாநகர சபை ஆணையாளருக்கான உத்தியோகபூர்வ நியமனக் கடிதம் வழங்கும் நிகழ்வு, நேற்று செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள ...
சட்டவிரோதமான முறையில் கால்நடைகளை ஏற்றிச்சென்ற லொறி ஒன்றின் மீது ஹுங்கம, கட்டகடுவ பகுதியில் வைத்து பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். லொறி ஒன்றில் சட்டவிரோதமாக கால்நடைகள் கடத்தப்படுவதாக ஹுங்கம பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், இன்று (20) காலை கட்டகடுவ பகுதியில் வீதித் தடை ஒன்று ...
கிழக்கு கொங்கோவில் பரவிவரும் அரிய வகை எபோலா நோயின் “அளவு மற்றும் வேகம்” குறித்து உலக சுகாதார அமைப்பின் தலைமை இயக்குநர் வெளிப்படையாக கவலை தெரிவித்துள்ளார். அங்கு, சந்தேகிக்கப்படும் இறப்புகளின் எண்ணிக்கை குறைந்தது 134 ஆகவும், சந்தேகிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை 500-க்கும் அதிகமாகவும் அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். முதல் ...
உள்ளூர் சந்தையில் விற்கப்படும் இறக்குமதி செய்யப்பட்ட பால் பவுடரின் விலை உடனடியாக உயர்த்தப்பட்டுள்ளது. விலை திருத்தத்தின்படி, 450 கிராம் (450g) இறக்குமதி செய்யப்பட்ட பால் பவுடர் பாக்கெட்டின் விலை ரூ. 50-ம், 1 கிலோகிராம் (1kg) பால் பவுடர் பாக்கெட்டின் விலை ரூ. 125-ம் உயர்த்தப்பட்டுள்ளது.
சைபர் குற்றச் செயல்களுக்குப் பயன்படுத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் கைபேசிகள் மற்றும் மின்கலங்கள் அடங்கிய சரக்குடன் மூன்று சீன நாட்டினர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். 5140 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 87 கைபேசிகளையும், அவற்றுக்கான 140 மின்கலங்களையும் தங்களது பயணப் பைகளிலும் உடல்களிலும் மறைத்து வைத்துக்கொண்டு வந்த மூன்று ...