இந்திய விமானப்படைத் தளபதி, ஏர் சீஃப் மார்ஷல் அமர் பிரீத் சிங் PVSM, AVSM அவர்களுக்கும், இலங்கை பாதுகாப்புச் செயலாளர், ஏர் வைஸ் மார்ஷல் சம்பத் துயகோந்தா (ஓய்வு) அவர்களுக்கும் இடையே நேற்று (19) ஒரு சந்திப்பு நடைபெற்றது. அது பாதுகாப்பு அமைச்சகத்தில் நடந்தது. பாதுகாப்புச் செயலாளர், இந்திய ...
அரச வருவாய் அதிகரித்து திறைசேரி நிரம்பி வழிகிறது என்றால், எரிபொருள் மற்றும் மின்சாரக் கட்டணங்களைக் குறைத்து மக்களுக்கு நிவாரணம் வழங்குமாறும், தேர்தல் காலத்தில் வாக்குறுதியளித்தபடி 12 இலட்சம் ரூபாவிற்கு ‘விட்ஸ்’ (Vitz) ரக காரை வாங்கும் மக்களின் கனவை நனவாக்குமாறும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அரசாங்கத்திற்குச் சவால் ...
நைஜீரிய மற்றும் அமெரிக்க பாதுகாப்புப் படையினர் இணைந்து நடத்திய தொடர் வான்வழித் தாக்குதல்களில், ஐஎஸ் (IS) அமைப்பின் இரண்டாவது மிக உயர்ந்த தலைவர் உட்பட 175 பயங்கரவாதிகள் உயிரிழந்துள்ளனர். இது தொடர்பாக நைஜீரியாவும் அமெரிக்காவும் உத்தியோகபூர்வ கூட்டு அறிக்கைகளை வெளியிட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உலகளவில் செயல்பட்டு ...
10.04.2026 தொடர்ச்சி இந்து ஆலயங்களும் அவற்றின் பரிபாலனமும் 6 தரிசனத்தின் இரண்டாம் அங்கமாக இந்து ஆலயங்களும் அவற்றின் பரிபாலனமும் என்ற விடயப் பொருளை தரிசனத்திற்காக எடுத்திருந்தோம். ஐந்து அத்தியாயங்கள் வெளிவந்த நிலையில், தவிர்க்க முடியாத சில காரணங்களால் தரிசனம் தொடர்ச்சியாக வெளிவர முடியாமல் போயிற்று. அதற்காக மனம் வருந்துகின்றோம். ...
அரசியலில் இராஜதந்திரம் என்பதுதான் பிரதானமானது. பாகிஸ்தானை தனி நாடாக்குவதைக் குறிக்கோளாகக் கொண்டு செயற்பட்டவர் ஜின்னா. மகாத்மா காந்தியடிகளுடன் சேர்ந்து அவரூடாக இந்திய தேசத்தில் இருந்து பாகிஸ் தானைப் பிரித்து அதனை முஸ்லிம் நாடாக ஆக்குவதில் ஜின்னா தீவிரமாக இருந்தார். அதேசமயம் பாகிஸ்தானைப் பிரித்து தனி நாடாக்குவது என்ற உத்தரவாதத்தை ...
சட்டவிரோதமான முறையில் தொடர்பாடல் உபகரணங்களைப் பயன்படுத்தி நடாத்திச் செல்லப்பட்ட தொலைக்காட்சி ஔிபரப்பு நிலையம் ஒன்றை கல்கிஸ்ஸ பிராந்திய குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் முற்றுகையிட்டுள்ளதுடன், வெளிநாட்டு சந்தேகநபர் ஒருவரையும் கைது செய்துள்ளனர். கல்கிஸ்ஸ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அத்திடிய வீதியில் அமைந்துள்ள கட்டிடம் ஒன்றில் இந்த ஔிபரப்பு நிலையம் நடத்தப்பட்டு ...
பயணிகள் போக்குவரத்து பேருந்து சேவையில் ஈடுபட்டிருந்த போது, போதைப்பொருள் பாவித்தமை உறுதி செய்யப்பட்ட 8 சாரதிகள் மற்றும் நடத்துனர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று (19) களுத்துறை தெற்கு பொலிஸ் நிலைய அதிகாரிகளால், தேசிய போக்குவரத்து மருத்துவ அதிகாரிகளுடன் இணைந்து இந்த கூட்டு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. களுத்துறை தெற்கு ...
தாயிடமிருந்து குழந்தைக்கு எச்.ஐ.வி மற்றும் சிபிலிஸ் பரவுவதைப் பொதுச் சுகாதாரப் பிரச்சினையாக இல்லாத அளவிற்குப் பாரியளவில் குறைத்து, அதனைத் தொடர்ச்சியாகப் பேணி வந்தமைக்காக உலக சுகாதார அமைப்பு இலங்கைக்கு விசேட பாராட்டுச் சான்றிதழை வழங்கியுள்ளது. இந்த பாராட்டுச் சான்றிதழ், சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் நடைபெற்று வரும் 79 ஆவது உலக ...
2026 சிறுபோகத்திற்குத் தேவையான 15,000 மெட்ரிக் தொன் யூரியா உரத்தைக் விவசாய அபிவிருத்தித் திணைக்களத்தின் விவசாய சேவைக்குழுக்கள் மூலம் கொள்முதல் செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 2026 சிறுபோகத்தில் 550,000 ஹெக்டேயர் நெல் நிலங்களில் பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்படும் என ஆரம்பத்தில் மதிப்பிடப்பட்டிருந்த போதிலும், தற்போதைய சூழ்நிலையின்படி அது 450,000 ...
ஆபத்தான ஹண்டா வைரஸ் மற்றும் இபோலா வைரஸ் பரவலானது, ‘அபாயகரமான மற்றும் பிளவுகளை ஏற்படுத்தும் காலப்பகுதியில்’ ஏற்பட்டுள்ள புதிய நெருக்கடிகள் என்று உலக சுகாதார அமைப்பின் (WHO) தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் தெரிவித்துள்ளார். ஜெனீவாவில் ஆரம்பமான உலக சுகாதார அமைப்பின் வருடாந்த தீர்மானம் எடுக்கும் பொதுச் சபை ...