வவுனியா, களுகுன்னாமடு அலகல்ல வீதியானது காப்பற்ற இடப்பட்டு போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்கவினால் இன்றையதினம் மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது. கிராமிய வீதி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் 42 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்ட இவ்வீதி திறப்பு விழாவில் போக்குவரத்து நெடுஞ்சாலைகள் அமைச்சர் பிமல்ரத்நாய, கூட்டுறவு ...
அரச சார்பற்ற நிறுவனம் (NGO) ஒன்றின் பிரதிநிதி போல் நடித்து, கனடாவில் வேலை பெற்றுத் தருவதாகக் கூறி ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமான பணத்தை மோசடி செய்த 28 வயதுடைய வாலிபர் ஒருவர் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசேட விசாரணை அதிகாரிகளால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். கைது ...
புதிய குடியேற்ற கொள்கையை அமெரிக்கா அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்மூலம் தற்காலிக விசாவில் அமெரிக்காவில் உள்ள வெளிநாட்டு நபர்கள் “Green Card” பெற விண்ணப்பிக்கும் முறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. புதிய விதிகளின்படி அமெரிக்காவிற்குள் இருந்தவாறே விண்ணப்பிப்பதற்குப் பதிலாக, தங்கள் சொந்த நாட்டிற்குத் திரும்பிச் சென்று விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு முன்னர் மாணவர் ...
வடக்கு சீனாவின் ஷாங்சி (Shanxi) மாகாணத்தில் உள்ள நிலக்கரி சுரங்கம் ஒன்றில் ஏற்பட்ட எரிவாயு வெடிப்பு சம்பவத்தில் 82 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும், இந்த விபத்தில் சிக்கி மேலும் 9 பேர் வரை காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த எரிவாயு வெடிப்பு சம்பவித்த தருணத்தில், ...
இந்து ஆலயங்களும் அவற்றின் பரிபாலனமும் 10 ஆக, கத்தோலிக்கம், இஸ்லாம் ஆகிய மதங்கள் உலகளவில் தலைமைப் பீடங்களைக் கொண்டிருப்பதுடன் முஸ்லிம் நாடுகள் இஸ்லாமிய மார்க்கத்திற்கான பாதுகாப்பையும் பலப்படுத்தி நிற்கின்றன. மேற்குறித்துரைத்த கத்தோலிக்கம்-இஸ்லாம் ஆகிய மதங்களின் தலைமைப் பீடங்கள் பலம் பெற்றிருக்கும் அதேவேளை பெளத்த மதத்தைப் பொறுத்தவரை இலங்கை அரசாங்கம் ...
கொங்கோ இராச்சியத்தில் பரவி வரும் இபோலா வைரஸ் தாக்கம் உயர் நிலையிலிருந்து அதி உயர் நிலைக்கு மாறியுள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. உலகளாவிய ரீதியில் இந்த நிலை குறைந்த மட்டத்தில் இருந்த போதிலும் ஆபிரிக்க வலயத்துடன் ஒப்பிடுகையில் உயர் மட்டத்தில் இருப்பதாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர் டெட்ரோஸ் ...
நாட்டில் தற்போது நிலவி வரும் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலைமை குறித்து விவாதிப்பதற்காக, அவசர நாடாளுமன்ற விவாதம் ஒன்றை நடத்துமாறு எதிர்க்கட்சியின் அரசியல் கட்சிகள் சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்னவிடம் கூட்டாகக் கோரிக்கை விடுத்துள்ளன. சபாநாயகருக்கும் எதிர்க்கட்சியின் அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கும் இடையில் நேற்று பிற்பகல் நாடாளுமன்ற வளாகத்தில் ...
அறிவுறுத்தல் என்பதும் அச்சுறுத்தல் என்பதும் ஒன்றன்று. அறிவுறுத்தல் என்பது விழிப்படைய வைப்பதற்கானது. அச்சுறுத்தல் என்பது பயப்படுத்துவதற்கானது. பொதுவில் எந்தவிடயமாயினும் அது சார்ந்து அறிவுறுத்தல்களை வழங்கி, மக்களை விழிப்படையச் செய்தல் வேண்டும். உதாரணத்திற்கு உலகப் பொருளாதாரத்தில் ஏற்படக்கூடிய மந்த நிலை மற்றும் உணவுக்கான தட்டுப்பாடு என்பன குறித்து ஐ.நா சபை ...
மோசமான வானிலை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு சூழ்நிலையால் கட்டுநாயக்க – மினுவாங்கொட பிரதான வீதி முற்றாக தடைப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. நைகந்த பகுதி உள்ளிட்ட இடங்களில் வெள்ளநீர் அதிகரித்துள்ளதால் அந்த வீதியில் வாகன போக்குவரத்து இயலாமை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஓட்டுநர்களும் பொதுமக்களும் மாற்று வழிகளை ...
274 மலையேற்ற வீரர்கள் உலகின் மிக உயர்ந்த சிகரமான எவரெஸ்ட் சிகரத்தை (8,849 மீற்றர்) ஒரே நாளில் நேபாளப் பகுதியூடாக சென்றடைந்து புதிய உலக சாதனை படைத்துள்ளதாக நேபாள மலையேற்றக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. எவரெஸ்ட் வரலாற்றில் ஒரே நாளில் இத்தனை அதிகமானோர் சிகரத்தைத் தொட்டது இதுவே முதல் முறையாகும். ...