அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் கீழ் 70 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கான மே மாதத்திற்கான கொடுப்பனவுகளை, நாளை (29) பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது. இதன்படி, ‘அஸ்வெசும’ திட்டத்தின் முதலாம் மற்றும் இரண்டாம் கட்டங்களின் கீழ் தகுதி பெற்ற ...
இந்து ஆலயங்களும் அவற்றின் பரிபாலனமும் 11 சிவபூமியாகிய எம் ஈழத் திருநாட்டில் சைவ சமயத்திற்கான ஒரு தலைமைப் பீடம் இல்லாமை மிகப் பெரும் குறைபாடாகவே உள்ளது. ஆம், இந்தியாவைப் பொறுத்தவரை அங்கு நாடு தழுவிய ரீதியில் அல்லது மாநில அடிப்படையில் இந்து சமயத்திற்கான தலைமைப் பீடங்கள் உள்ளன. அதிலும் ...
நவீன தகவல் தொழில்நுட்ப யுகத்தில் நம் இளம் பிள்ளைகளைப் பாதிக்கின்ற சம்பவங்களை நினைக்கும் போது இதயம் பதறுகிறது. ஆம், இன்றைய மிக மோசமான காலசூழலில் பிள்ளைகளை வளர்த்தெடுப்பது எங்ஙனம் என்ற ஏக்கத்தின் மத்தியில், ஒவ்வொரு நாளும் நம் நாட்டில் நடந்தாகின்ற குற்றச் செயல்களை எண்ணுங்கால் எங்கள் சமயக் கல்வி ...
செவிலியர் நோக்குநிலை மற்றும் ஒருங்கிணைப்புப் பயிற்சியை வெற்றிகரமாக முடித்த 515 இளம் அறிவியல் செவிலியர் பட்டதாரிகளை நேரடிச் சேவையில் இணைத்துக்கொள்வதற்கு சுகாதார மற்றும் ஊடக அமைச்சகம் தற்போது நடவடிக்கை எடுத்துள்ளது. நாட்டின் இலவச சுகாதார சேவையின் மனித வளம், தரம் மற்றும் வினைத்திறனை மேம்படுத்தும் நோக்குடன் இந்தத் திட்டம் ...
ஐக்கிய அரபு இராச்சியத்தின் அபுதாபி பாதுகாப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு, அந்நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்ட ஏழு இலங்கை இளைஞர்கள் நேற்றிரவு (27) கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர். மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் தொடர்பான ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களின் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளைத் தம்வசம் வைத்திருந்ததுடன், ...
மட்டக்களப்பு புதூரில் உள்ள இலங்கை விமானப்படை முகாமுக்கு முன்னால் உள்ள வீதியில், மோட்டார் சைக்கிள் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து வாவியில் வீழ்ந்ததில், இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் நேற்று (27) மாலை இடம்பெற்றுள்ளதாக மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸார் தெரிவித்தனர். மட்டக்களப்பு, திருப்பெருந்துறை, 04 ஆம் குறுக்கு வீதியைச் சேர்ந்த ...
யாழ்ப்பாணம் புங்குடுதீவு 3ஆம் வட்டாரக் கடற்பகுதியில் சடலம் ஒன்று நேற்று (27) கரையொதுங்கியுள்ளது. குருநகர் பகுதியைச் சேர்ந்த 62 வயதுடைய ஒருவரின் சடலமே இவ்வாறு கரையொதுங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது. அவர் கடந்த 25 ஆம் திகதி கடற் தொழிலுக்காகச் சென்ற நிலையில் காணாமல் போயிருந்ததாக பொலிஸில் முறைப்பாடளிக்கப்பட்டிருந்தது. தீவிரமாக தேடுதல் ...
இலங்கையில் உள்ள சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் தமிழக முதலமைச்சர் விஜய் கோரிக்கை விடுத்துள்ளார். தமிழக முதலமைச்சர் விஜய் நேற்று (27) இந்திய பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து கலந்துரையாடிய போதே, இந்த கோரிக்கையை ...
ஜனாதிபதி செயலகத்தினால் தேசிய சுதந்திர முன்னணிக்கு வழங்கப்பட்ட வாகனங்களை துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள தேசிய சுதந்திர முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீரவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு கோட்டை நீதவான் பசன் அமரசேன உத்தரவிட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பான வழக்கு ...
பிரதமர் ஹரிணி அமரசூரியவின் பெயர், புகைப்படங்கள் மற்றும் காணொளிகளைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் போலிச் செய்திகளை நம்ப வேண்டாம் என்று பிரதமரின் அலுவலகம் அறிவித்துள்ளது. இவ்வாறு போலியாகத் தயாரிக்கப்பட்ட செய்திகள் சமூக ஊடகங்களில் பரவி வருவது கண்டறியப்பட்டுள்ளதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் கருத்து தெரிவிப்பது போன்று தயாரிக்கப்பட்ட போலி ...