Type to search

Headlines Local News News

பிரதமர் அலுவலகம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

Share

பிரதமர் ஹரிணி அமரசூரியவின் பெயர், புகைப்படங்கள் மற்றும் காணொளிகளைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் போலிச் செய்திகளை நம்ப வேண்டாம் என்று பிரதமரின் அலுவலகம் அறிவித்துள்ளது.

இவ்வாறு போலியாகத் தயாரிக்கப்பட்ட செய்திகள் சமூக ஊடகங்களில் பரவி வருவது கண்டறியப்பட்டுள்ளதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் கருத்து தெரிவிப்பது போன்று தயாரிக்கப்பட்ட போலி காணொளிகள் மற்றும் பிரதமரின் புகைப்படத்தை உள்ளடக்கி தயாரிக்கப்பட்ட போலிப் பதிவுகளைச் சமூக ஊடகங்களில் சில தரப்பினர் வெளியிட்டுள்ளதாகவும், அதன் மூலம் பல்வேறு தொழில்முனைவோர் வாய்ப்புகள், வேலைவாய்ப்புகள் மற்றும் நாட்டின் பொருளாதாரம் மற்றும் வரிக் கொள்கைகள் தொடர்பான போலிச் செய்திகள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிவிப்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் நவீன தொழில்நுட்பக் கருவிகளைப் பயன்படுத்தி இவ்வாறான போலிச் செய்திகள் உருவாக்கப்பட்டுள்ளதால், இத்தகைய செய்திகளை நம்ப வேண்டாம் என்றும், இது குறித்து அவதானத்துடன் இருக்குமாறும் பொதுமக்களிடம் பிரதமரின் அலுவலகம் கேட்டுக்கொண்டுள்ளது.

அரசாங்கத்திற்கும் பிரதமரின் தனிப்பட்ட நற்பெயருக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் இவ்வாறான போலிச் செய்திகளை உருவாக்குவதும், அவற்றைச் சமூக ஊடகங்களில் பகிர்வதும் சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும் என்றும் அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link