Type to search

Headlines Local News News

ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து ஏழு இலங்கையர்கள் நாடு கடத்தல்

Share

ஐக்கிய அரபு இராச்சியத்தின் அபுதாபி பாதுகாப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு, அந்நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்ட ஏழு இலங்கை இளைஞர்கள் நேற்றிரவு (27) கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர். 

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் தொடர்பான ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களின் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளைத் தம்வசம் வைத்திருந்ததுடன், அவை தொடர்பான சமூக ஊடகப் பதிவுகளுக்கு ‘லைக்’ செய்தமை மற்றும் கருத்துகளை பதிவிட்டமைக்காக இவர்கள் அபுதாபி பாதுகாப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்தனர். 

அம்பலாங்கொட, மாரபன, பொரளை, பண்டாரகம, பொலன்னறுவை மற்றும் வத்தளை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 23 முதல் 33 வயதுக்கு இடைப்பட்ட இளைஞர்களே இவ்வாறு நாடு கடத்தப்பட்டுள்ளனர். 

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்தடைந்தவுடன், விமான நிலைய குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள், அரச புலனாய்வுப் பிரிவினர் மற்றும் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் இணைந்து இவர்களிடம் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link