Type to search

Articles இன்று ஒரு தகவல்

இன்று ஒரு தகவல்

Share

நம் வாழ்க்கை நம் கையில்

பஞ்ச பாண்டவர்கள் ஐந்து பேர். அதிலே மூத்தவர் தருமர். ஒரு நாள் அவர் வீட்டுத்திண்ணையில் உட்கார்ந்திருந்தாராம். அப்போது தெருவிலே பிச்சைக்காரன் வந்திருக்கான். இவர் முன்னால் வந்து நின்று பிச்சை கேட்டான். அந்த சமயத்திலே தருமர் ஏதோ வேலையாக இருந்திருக்கார். அதனாலே ‘நாளைக்கு வா” என்று சொல்லி அவனை அனுப்பி வைத்து விட்டார். அவனும் சரி என்று சொல்லிவிட்டு போயிட்டான்.

பீமன் இதைப் பார்த்து கொண்டிருந்தான். உடனே என்ன செய்தான் தெரியுமா?

ஒரு முரசை எடுத்துக் கொண்டு கிராமத்தை நோக்கி ஓடினான். முரசு அடித்துக் கொண்டு ஏதோ சொல்ல ஆரம்பித்தான. தருமருக்கும் இது தெரிஞ்சுது.. “என்ன ஆச்சு உனக்கு” என்று கேட்டார்.

அதுக்குப் பீமன் சொன்னார், நான் கிராம மக்களுக்கு “என். அண்ணன் காலத்தை வென்றுவிட்டார்” என்று சொல்லிவிடப் போறேன் என்றான்.

“ஏன் அப்படி சொல்லப் போகிறாய்” என்றான்.

நீங்க பிச்சைக்காரனை நாளைக்கு வரச் சொன்னீங்களே. நீங்க நிச்சயமா நாளைக்கு இருப்பீங்களா? அந்தப் பிச்சைக்காரனும் நாளைக்கு உயிரோடு இருப்பானா?

நாளைக்கு நீங்க இருந்தாலும் பிச்சை போடும் மனோபாவம் உங்களுக்கு இருக்குமா? பிச்சை நிச்சயம் போடுவீங்களா நாளை வரை அவன் பிச்சைக்காரனாவே இருப்பான் என்கிறது நிச்சயமா? நாளைக்கு உங்கள் சந்திப்பு நிச்சயம் நடக்குமா?

நீங்கள் காலத்தை வென்று விட்டீர்கள்.. அதனாலேதான் அவ்வளவு நிச்சயமா நாளைக்கு வரச்சொல்லியிருக்கிறீர்கள்.

இது எவ்வளவு பெரிய விஷயம்? நேரமாயிட்டுது. நான் ஊருக்குள்ள போய் உடனே எல்லோருக்கும் இதை சொல்லி விட வேண்டும். தாமதிக்க முடியாது. ஏன் என்றால். இந்த நேரம் போய்விட்டால் அடுத்த நாளிகை எனக்கு கிடைக்கும் என்பது நிச்சயமில்லை.” அப்படின்னான் என்றான் பீமன்.

உடனே தருமர் சொன்னார்… “தம்பி.. கொஞ்சம் பொறு-நான் தவறு செய்து விட்டேன். பரிபூரண சுதந்திரம் பெற்றமனிதன் தான் அப்படிப் பேசமுடியும். அப்படி வாக்குறுதி தரமுடியும்.

அந்தப் பிச்சைக்காரனை இப்போதே கூப்பிடு. ஏதாவது உடனே கொடுத்து அனுப்பி வவைக்கிறேன். நாளைக்கு என்ன நடக்கும் என்று யாருக்குத் தெரியும்?” என்றார்.

இதிலேயிருந்து நாம் என்ன தெதரிந்து கொள் வேண்டும் என்றால் நிகழ்காலம் தான் நமது கையிலே இருககிறது. அதைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டியது நமது பொறுப்பு.

ஒரு ஊரிலே ஒரு ஜோதிடர் இருந்தார். அவர் எதிர் காலத்தைப் பத்தியே அதிகமா சொல்லிக் கொண்டே இருந்தார். அவர் ஜோசியத்தைப் பொய்யாக்கிவிட வேண்டும் என்று இரண்டு இளைஞர்கள் தீர்மானம் செய்தார்கள். அதற்காக ஒரு திட்டம் போட்டார்கள்.

அது குளிர்காலம். ஒரு இளைஞன் பெரிய கோட்டு ஒன்றை சட்டைக்கு மேலே போட்டுக் கொண்டான். அந்த மேல் கோட்டுக்குள்ளே, ஒரு புறாவை மறைச்சு வைத்துக் கொண்டான். இரண்டு பேரும் அந்த ஜோசியர் வீட்டுக்குப் போனார்கள். அவரைப் பார்த்தார்கள்.

“இதோ பாருங்கள்.. இந்தக் கோட்டுக்குள்ளே ஒரு புறாவை மறைச்சு வைத்திருக்கின்றோம். அந்தப் புறா இப்ப உயிரோடு இருக்கா… இறந்து போய்விட்டதா என்று இதை நீங்க சொல்ல வேண்டும்.

சொல்லிவிட்டா உங்க ஜோசியத்தை நம்புகின்றோம் என்றார்கள். இவர்கள் மனதிற்குள்ளே என்ன திட்டம்- என்றால் புறா உயிரோடு இருக்கிறது என்று சொல்லி விட்டார் என்றால் அப்படியே கையாலே அமுக்கிக் கொன்று விடுவது.

செத்து விட்டது என்று சொன்னால் அப்படியே உயிரோடு எடுத்துக் காட்டுவது.

இதுதான் அவங்க திட்டம். அவர் என்ன பதில் சொன்னாலும் அவர் சொல்றதை பொய் என்று நிரூபித்து விடலாம் என்பது அவர்கள் நம்பிக்கை. இந்த ஜோசியர் எந்த வகையிலும் தப்பிக்க முடியாது என்று நம்பினார்கள்.

ஆனால் அந்த ஜோசியர் சொன்ன பதில் அந்த இளைஞர்களைத் திகைக்க வைத்துவிட்டது.

அவரு என்ன சொன்னார் தெரியுமா?

“உங்க கோட்டுக்குள்ளே இருக்கிற புறா உயிரோட இருக்கா செத்துப் போச்சா என்று தானே கேக்கிறீங்க? அது உங்க கையிலே இருக்கு…. அது சாகவும் இல்லை. உயிரோடும் இல்லை. அதோட வாழ்வும் சாவும் உங்க கையிலே தான் இருக்கு!” என்றார்.

இந்த இளைஞர்கள் தோல்வியை ஒத்துக் கொண்டு தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டு போய் விட்டார்கள்.

அதனாலே நம்ம வாழ்க்கை என்பது நமது கையிலேதான் இருக்கு. நாம் நல்லா இருக்கிறதற்கும் அப்படி இல்லாமல் போறதற்கும் காரணம் நாம் தான்.இதைப் புரிந்து கொண்டு ஒவ்வொரு விநாடியையும் அனுபவித்து வாழப்பழக வேண்டும்.

ஒரு வைத்தியசாலைக் கட்டிலிலே இருந்த நோயாளி சொன்னார்.

“டாக்டர். என்னுடைய வாழ்வும் சாவும் உங்களது கையிலே தான் இருக்கு… ஏன் என்றால் இப்ப எனக்கு ஆப்ரேஷன் செய்ளப் போவது என்றான்.

“பயப்படாதீங்க…. எல்லாம் நாங்க பார்த்துக்கிறோம்!’ என்றார்அந்த டாக்டர்.

“அதுக்கில்லை டாக்டர்… இதுவரைக்கும் நான் தைதியசாலைப் பக்கமே வைத்தியத்துக்கு என்று வந்ததில்லை. இதுதான் எனக்கு முதல் ஆப்ரேஷன்… அதுதான் பயமா இருக்கு! என்றார் அவர்.

அதுக்கு அந்த டாக்டர், எனக்கும் தான் இது முதல் ஆபரேசன் அதற்காக நான் என்ன பயப்படுகிறேனா பாருங்கள் என்றார்.

தென்கச்சி.கோ.சுவாமிநாதன்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link